Headlines

இசுறுபாயவுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்யத்தடை




வைத்தியர்களின் பிள்ளைகளை, அரசாங்கப் பாடசாலைகளுக்குச் சேர்ப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைக்கு எதிராக, இசுறுபாயவிலுள்ள கல்வி அமைச்சுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, அரசாங்க வைத்திய அதிகாரிகளின் சங்கத்தை, அங்கிருந்து விலகிச் செல்லுமாறு, கடுவெல நீதவான் நீதிமன்றத்தினால், சற்றுமுன்னர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பொதுமக்களை அசௌகரியத்துக்கு உள்ளாக்குதல், சமாதானத்தை சீர்குழைத்தல் போன்ற விடயங்களைக் கருத்திற்கொண்டே, கடுவெல நீதவான் தம்மிக்க ஹேமபாலவினால், இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *