Headlines

தென்கொரியா சென்றடைந்தார் மஹிந்த!




முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தென் கொரியாவிற்கு இன்று (5) அதிகாலை 1.30 மணியளவில் சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் தென் கொரியாவிற்கு ஆறு நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இவர் தென் கொரியாவில் இடம் பெற உள்ள மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காகவும்அங்கு வாழ்கின்ற இலங்கையர்களை சந்திப்பதற்காகவும் தென் கொரியாவிற்கு விஜயம்மேற்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர்கள் ஜ.எல்.பீரிஸ்,மகிந்தானந்த அலுத்கமகே,பந்துல்ல குணவர்தன மற்றும் டளஸ் அழகப்பெரும ஆகியோர் மகிந்தவுடன் பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *