Headlines

பொறுமையாக இருங்கள் – முஸ்லிம் பிரதிநிதிகள் வேண்டுகோள்




பாத்தியா பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் கொஞ்ச நாட்கள் அமைதி காக்குமாறு முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பாத்தியா பள்ளிவாசலில் நேற்றிரவு (புதன்) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இவர்கள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

நல்லாட்சியில் பாத்தியா பள்ளிவாசலுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலுக்கு எதிராக முஸ்லிம் இளைஞர்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்க தயாரான நிலையிலேயே இவர்கள் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விடயம் தொடர்பில் பிரதமர், ஜனாதிபதி மற்றும் உயர் பொலிஸ் அதிகாரிகளையும் சந்தித்து சுமுகமான தீர்வைப் பெறுவதற்கு முயற்சித்து வருவதாகம் இவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நல்ல முடிவு கிடைக்கும் வரைக்கும் பொறுமை காக்குமாறு முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் வேண்டிக் கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *