Headlines

அரசியலில் ஈடுபடுவது பற்றி இன்னும் தீர்மானிக்கவில்லை! திஸ்ஸ




அரசியலில் ஈடுபடுவது தொடர்பாக இன்னும் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசியலில் இருந்து தான் தற்போது ஒதுங்கியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

வெலிகம்பிட்டியவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது, ஊடகங்களுக்கு கருத்து வௌியிடுகையிலேயே திஸ்ஸ அத்தநாயக்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த திஸ்ஸ அத்தநாயக்க, கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் மற்றும் அப்போதைய ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்தார்.

இதனையடுத்து ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து அவரை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *