Headlines

நீதிமன்றில் ஆஜராக ஆயத்தமாகும் மைத்திரி

இலங்கை ஜனாதிபதிகள் சட்டத்திற்கு மேல் உள்ளவர்களாக கருதி இதுவரை செயற்பட்ட யுகத்தை நிறைவு செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆயத்தமாகியுள்ளார். அதற்கமைய அவர் சாதாரண குடிமகனாக நீதிமன்றில் ஆஜராகுவதற்கு ஆயத்தமாகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் போது, அப்போதைய ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸஸ அத்தநாயக்க மோசடியான முறையில் தயாரிக்கப்பட்ட ஆவணங்களை ஊடகங்களின் முன் சமர்ப்பித்து, மக்களை பிழையாக நடத்தியிருந்தார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் திஸ்ஸவுக்கு எதிராக நீதிமன்றில் தொடுக்கப்பட்ட வழக்கின்…

Read More

திஸ்ஸவுக்கு நோட்டீஸ்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்கவை மன்றில் ஆஜராகுமாறு  கொழும்பு மேல் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பிவைத்துள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, போலியான ஆவணங்களை சமர்ப்பித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவரை நீதிமன்றத்தின் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

Read More

அரசியலில் ஈடுபடுவது பற்றி இன்னும் தீர்மானிக்கவில்லை! திஸ்ஸ

அரசியலில் ஈடுபடுவது தொடர்பாக இன்னும் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். அரசியலில் இருந்து தான் தற்போது ஒதுங்கியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். வெலிகம்பிட்டியவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது, ஊடகங்களுக்கு கருத்து வௌியிடுகையிலேயே திஸ்ஸ அத்தநாயக்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த திஸ்ஸ அத்தநாயக்க, கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் மற்றும்…

Read More

திஸ்ஸவிற்கு எதிரான விசாரணை சட்டமா அதிபரிடம் ஒப்படைப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் சுகாதார அமைச்சருமான திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிரான விசாரணை சட்ட மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க இந்த தகவலை நாடாளுமன்றில் நேற்று (25) தெரிவித்துள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் போலி ஆவணம் தயாரித்ததாக திஸ்ஸ அத்தநாயக்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு குறித்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி அந்த அறிக்கையை சட்டமா அதிபரிடம் ஒப்படைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். போலி ஆவணம் தயாரிப்பு…

Read More

அரசியல் எதிர்காலம் பற்றி விரைவில் தீர்மானிக்கப்படும்! திஸ்ஸ அத்தநாயக்க

அரசியல் எதிர்கலம் பற்றி விரைவில் தீர்மானிக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார். வெகு விரைவில் பொருத்தமான தருணத்தில் அரசியல் ரீதியான தீர்மானம் ஒன்று எடுக்கப்படும். ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தேசிய அரசாங்கம் என்ற பெயரில் மக்களை பிழையாக வழி நடத்துகின்றன. இரண்டு கட்சிகளினதும் இந்த நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டும். எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலிலிருந்தே இந்த இரண்டு கட்சிகளுக்கு எதிராகவும் செயற்படத்…

Read More

மீண்டும் அரசியலில் ஈடுபட விரும்புகின்றேன் – திஸ்ஸ

மீண்டும் அரசியலில் ஈடுபட எதிர்பார்ப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். கண்டி அஸ்கிரி விஹாரைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட போது இதனைத் தெரிவித்துள்ளார். மீண்டும் செயற்பாட்டு அரசியலில் ஈடுபட விரும்புகின்றேன். பல்வேறு அரசியல் தீர்மானங்கள் காரணமாக அரசியல் ரீதியாக பல்வேறு நெருக்குதல்களை எதிர்நோக்க நேரிட்டது. எனினும், அரசியலில் ஈடுபடவே விரும்புகின்றேன் என திஸ்ஸ அத்தநாயக்க ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Read More

தண்டனை விதிப்பதனால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது

பழைய தவறுகளுக்கு தண்டனை விதித்து தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என முன்னாள் அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். எமது நாட்டில் 30 ஆண்டுகள் போர் இடம்பெற்றது. போர் இடம்பெறும் போது அனைத்து விடயங்களும் சட்ட ரீதியாக நடைபெறாது. இராணுவத்திற்கோ, ஆட்சியாளர்களுக்கோ அல்லது போர் செய்தவர்களுக்கோ தண்டனை விதிப்பதனால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. சிங்களம் தமிழ் என்று பேதமில்லை. அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். மீளவும் இதயங்களை குரோதம் ஏற்படாத வகையில் தேசிய…

Read More