Headlines

ஆஸி. சுற்றுலா பயணிகளிடம் கோரிக்கை




– ஜே.ராஜன் –

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய சுற்றுலா பயணிகளுக்கு புதிய ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்த அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷெப், தெரிவிக்கையில் இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாகவே இவ்வாறான முன்னெச்சரிக்கை ஆலோசனைகளை வழங்கப்பட்டுள்ளன.

இலங்கையிலுள்ள அவுஸ்திரேலிய சுற்றுலா பயணிகள் இலங்கை அரசாங்கத்தின் அனர்த்த முகாமைத்துவம்  தொடர்பான அறிவுறுத்தல்களை பின்பற்றுதல் வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் இலங்கையிலுள்ள  ஏனைய சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு இலங்கை சுற்றுலா அமைச்சினூடாக  உறுதிப்படுத்தப்படுமென இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *