Headlines

ஆஸியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக கிரேம் ஹிக்

ஆஸி அணியின் புதிய துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக முன்னாள் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் துடுப்பாட்ட வீரரான கிராம் ஹிக் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இவர் நவம்பர் மாதம் தென்னாபிரிக்கா அணியுடனான தொடரிலிருந்து தனது பணியை ஆரம்பிக்கவுள்ளதாக ஆஸி  கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இவர் தென்னாபிரிக்கா போட்டியிலிருந்து தனது பணியை முன்னெடுத்தாலும்,  அடுத்த வருடம் இந்தியவுடன் இடம்பெறவுள்ள 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு வீரர்களை தயார்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிப்பார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. காரணம் இலங்கையுடனான டெஸ்ட் போட்டியின் தோல்வியுடன் கடந்த 9…

Read More

கடல் மார்க்கமாக தப்புவது ஆபத்தானது என அகதிகள் உணர வேண்டும்!

கடல் மார்க்கமாக அகதிகள் தப்பிச்செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, இந்திய கடலோர காவல்படையின் ஏ.டி.ஜி.பி., சைலேந்திரபாபு கூறியுள்ளார். மேலும் அவர், கடலில் தப்பிச்செல்வது ஆபத்தான பயணம் என்பதை அகதிகள் உணர வேண்டும் எனவும், அகதிகள் தப்பிச் செல்வதை தடுக்க, முகாம்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, கடலோரப் பகுதியான பழவேற்காட்டில் உள்ள பாதுகாப்புக் குறைபாடு காரணமாக அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல இலங்கை அகதிகள் முயன்றுள்ளதாக தமிழக ஊடகமான தினமணி குறிப்பிட்டுள்ளது. கடந்த முதலாம்…

Read More

ஆஸி. சுற்றுலா பயணிகளிடம் கோரிக்கை

– ஜே.ராஜன் – இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய சுற்றுலா பயணிகளுக்கு புதிய ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்த அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷெப், தெரிவிக்கையில் இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாகவே இவ்வாறான முன்னெச்சரிக்கை ஆலோசனைகளை வழங்கப்பட்டுள்ளன. இலங்கையிலுள்ள அவுஸ்திரேலிய சுற்றுலா பயணிகள் இலங்கை அரசாங்கத்தின் அனர்த்த முகாமைத்துவம்  தொடர்பான அறிவுறுத்தல்களை பின்பற்றுதல் வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் இலங்கையிலுள்ள  ஏனைய சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு இலங்கை சுற்றுலா அமைச்சினூடாக…

Read More

அவுஸ்திரேலியா நீதிமன்றத்திற்கு இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் பெண் நீதிபதியாக நியமனம்

அவுஸ்திரேலியா நீதிமன்றத்திற்கு கல்ஹின்னயைச் சேர்ந்த முஸ்லிம் பெண் நீதிபதியாக நியமனம் அவுஸ்திரேலிய விக்டோரியா மஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் நீதிபதியாக இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் பெண் நியமிக்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலிய சட்டமா அதிபர் மார்ட்டீன் பகுலா இவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதை அறிவித்துள்ளார். உர்பா மசூத் என்னும் இலங்கைப் பெண்ணே இவ்வாறு நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கண்டி மாவட்டம் கல்ஹின்ன, பாடசாலை வீதியைச் சேர்ந்த மசூத் – சித்தி சாஹிரா தம்பதியின் புதல்வி ஆவார். இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து ஐக்கிய இராச்சியத்தில் வாழ்ந்த…

Read More

இலங்கையுடன் உறவு தொடரும்: அவுஸ்திரேலியா

இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்திக்கு அவுஸ்திரேலியா தொடர்ந்தும் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஜூலியா பிஸப் இதனை தெரிவித்துள்ளார். இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையும் அவுஸ்திரேலியாவும் புரிந்துணர்வுடன் கூடிய உறவைக் கொண்டிருக்கின்றன. அவுஸ்திரேலியாவில் சுமார் 130, 000 பேர் தங்கியுள்ளனர். இவர்கள் அவுஸ்திரேலியாவின் அபிவிருத்திக்கு உறுதுணையாக செயற்பட்டு வருகின்றனர் என்றும் பிஸப் குறிப்பிட்டுள்ளார்’

Read More

ஆஸ்திரேலியாவில் முதல் முஸ்லிம் அரசியல் கட்சி உதயம்

– அலுவலக நிருபர் – ஆஸ்திரேலியாவில் முதல் முதலாக முஸ்லிம்களை பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சியொன்று உதயமாகியுள்ளது. இந்த கட்சியின் அன்குரார்பன நிகழ்வு அண்மையில் சிட்னி நகரில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றிய கட்சியின் ஸ்தாபகர் திரு.முஹம்மத்  “எமது கட்சி ஆஸ்திரேலியாவிலுள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்களின் குரலாகவும் ஒலிக்கும், எதிர்வரும் செனட்   தேர்தலில் களமிறங்க விரும்புகிறது” – எனவும் தெரிவித்தார். ஆஸ்திரேலியாவில் அதிக கட்சிகள் முஸ்லிம் விரோத போக்கை கொண்டதென்பது குறிப்பிடத்தக்கது.

Read More

நிறவெறி கொண்ட Apple Store ஊழியர்கள் (video)

ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கருப்பின மாணவர்கள் அவமதிக்கப்பட்ட வீடியோ பேஸ்புக்கில் வைரலானதையடுத்து ஆப்பிள் நிறுவனம் அச்சிறுவர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள மேரிபைர்னாங் பகுதியில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் கடை ஒன்றிற்கு ஆப்பிரிக்காவை சேர்ந்த கருப்பின மாணவர்கள் 6 பேர் கடந்த செவ்வாய் அன்று சென்றுள்ளனர். அப்போது, கருப்பின மாணவர்களை நிறுவனத்தின் ஊழியர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஏன் என்று கேட்டதற்கு “நீங்கள் உள்ளே இருந்தால், மற்றவர்களுக்கு நீங்கள் ஏதாவது திருடிவிடுவீர்களோ என்ற அச்சம் இருக்கும்” என்று…

Read More