Headlines

உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 71 ஆக அதிகரிப்பு

இலங்கையில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளினால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 71ஆக உயர்ந்துள்ளது என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது. பாதுகாப்பான 497 தற்காலிக இடங்களில் 278,578 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கூறினார். எவ்வாறாயினும் இலங்கையை பாதிப்படையச் செய்திருந்த அசாதாரண காலநிலையில் சிறு மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். எவ்வாறாயினும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகள் தொடர்ந்து இடம்பெறுவதாகவும், மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவுகள் 24 மணி நேரமும்…

Read More

ஆறுகளில் நீர் மட்டங்கள் சாதாரண நிலையில்

கடந்த 24 மணி நேரத்திற்குள், அனைத்து ஆற்றுப் பகுதிகளிலும் உள்ள ஆறுகளில் நீர் வழமைபோன்று மாற்றமடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் கூறியுள்ளது. மலைநாட்டுப் பகுதிகளில் ஆற்று நீர் மட்டம் பெரும்பாலும் குறைந்துள்ளதாக அந்த திணைக்களத்தின் நீர்ப்பாசன இயக்குனர் பிரேமா ஹெட்டியாராச்சி கூறினார். எவ்வாறாயினும் ஆறுகளை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளநிலை தொடர்ந்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாட்டின் அனைத்து நீர் நிலைகளிலும் நீர் மட்டம் சாதாரண நிலைக்கு திரும்பியுள்ளதாகவும், வான்கதவுகள் திறக்கப்படுவதை தவிர்த்து இருப்பதாகவும் பிரேமா ஹெட்டியாராச்சி கூறினார்.

Read More

நிவாரணம் வழங்க தனியாக வரவேண்டாம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களும் நிவாராண பொருட்களை எடுத்துகொண்டு தனிப்பட் ரீதியில் யாரும் வரவேண்டாம் என் பாதுகாப்பு தரப்பினர், பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர். தனிப்பட்ட நபர்கள் மற்றும் குழுவால் முன்னெடுக்கப்படு நிவாரணம் வழங்கும் நடவடிக்கையில் சன நெரிசல் ஏற்படுவதாகவும் நிவாரணம் வழங்கும் நடவடிக்கையை முகாமைத்துவம் செய்வது கடினமாக உள்ளதாகவும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவிக்கின்றனர். நிவாரண பொருடகளை வழங்குவோர், பாதுகாப்பு பிரிவினர் மற்றும் பிரதேச செயலாளர் பிரிவுகளின் ஊடாக ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள மத்திய நிலையங்களில் நிவாரண பொருட்களை ஒப்படைக்குமாறு கேட்டுகொள்ளப்படுகின்றனர்.

Read More

எவரஸ்ட் சிகரத்தை அடைந்த ஜயந்திக்கு பிரதமர் வாழ்த்து

எவரஸ்ட்டில் சிகரத்தில் ஏறிய முதல் இலங்கைப் பெண் என்ற சாதனையைப் படைத்த ஜயந்தி குரு உடும்பலவுக்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இந்தச் சாதனை, எவ்வித இடையூறுமின்றி அடைவதற்கு உதவிய, யெஹான் பீரிஸுக்கும், பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

Read More

 அத்துருகிரிய நுழைவாயில் திறக்கப்பட்டுள்ளது

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் அத்துருகிரிய நுழைவாயில் தற்போது திறக்கப்பட்டுள்ளது. குறித்த வாயிலில் ஊடாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்குள் பிரவேசிக்க முடியும் என வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. சீரற்ற வானிலை காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் அத்துருகிரிய நுழைவாயில், கடந்த சில நாட்களாக மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

களனி கங்கையின் நீர்மட்டம் குறைகிறது

களனி கங்கையின் நீர்மட்டம் குறைந்து வருவதாகத் தெரிவித்துள்ள நீர்ப்பாசனத் திணைக்களம், இன்னும் மூன்று நாட்களில் கங்கையின் நீர்மட்டம் சாதாரண நிலைக்கு வரும் எனத் தெரிவித்துள்ளது. எனினும், வெள்ளம் வடிவதற்கு சில நாட்களாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Read More

ஆஸி. சுற்றுலா பயணிகளிடம் கோரிக்கை

– ஜே.ராஜன் – இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய சுற்றுலா பயணிகளுக்கு புதிய ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்த அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷெப், தெரிவிக்கையில் இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாகவே இவ்வாறான முன்னெச்சரிக்கை ஆலோசனைகளை வழங்கப்பட்டுள்ளன. இலங்கையிலுள்ள அவுஸ்திரேலிய சுற்றுலா பயணிகள் இலங்கை அரசாங்கத்தின் அனர்த்த முகாமைத்துவம்  தொடர்பான அறிவுறுத்தல்களை பின்பற்றுதல் வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் இலங்கையிலுள்ள  ஏனைய சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு இலங்கை சுற்றுலா அமைச்சினூடாக…

Read More

சீரற்ற காலநிலை : அமெரிக்கா, பாக்., ,ஆஸி., சீனா நாடுகளும் உதவி

நாடாளவிய ரீதியில் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களுக்கு உடனடி மனிதாபிமான நிவாரண உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்கா,   பாகிஸ்தான், சீனா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளும் முன்வந்துள்ளன. ஏற்கனவே ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் தமது நிவாரணப் பொருட்களை கப்பல்கள் மற்றும் விமானங்கள்  ஊடாக இன்று நாட்டுக்கு அப்பிவைத்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அமெரிக்கா 50ஆயிரம் டொலர் நிதியை வழங்குதற்கு முன்வந்துள்ளது. அதேநேரம் பாகிஸ்தான், அவுஸ்திரேலியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தேவையான உதவிகளை வழங்குவதற்கு…

Read More

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அமைச்சர் றிஷாத் விஜயம்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அமைச்சர் றிஷாத் விஜயம். பாதிகாப்பு ஏற்பாடுகள் குறித்து பொலிஸ் மா அதிபருடன் பேச்சு -சுஐப் எம் காசிம் – உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு சில தினங்களுக்கு முன்னர் வெளிநாடு சென்ற அமைச்சர் றிஷாத் பதியுதீன் தனது விஜயத்தை இரத்து செய்து விட்டு நேற்று (20) மாலை நாடு திரும்பினார். வெள்ளத்தினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட வெல்லம்பிட்டி, வசட்டுவ, மீகொட கொலன்னாவ, வென்னவத்த, புத்கம, களனிபுர பிரதேசங்களுக்கும் அமைச்சர் நேரில் சென்று பாதிக்கப்பட்ட அகதிகளின்…

Read More