Headlines

புலனாய்வு பொலிஸார் இருவர் கைது




மட்டக்களப்பு, காத்தான்குடிப் பொலிஸ் பிரிவில் பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் புலனாய்வு உத்தியோகஸ்தர்கள் இருவரை திங்கட்கிழமை (25) இரவு கைதுசெய்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபர்கள், 38 வயதுடைய குறித்த பெண்ணை முச்சக்கரவண்டி ஒன்றில் காத்தான்குடிப் பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக விசாரணையிலிருந்து தெரியவருகின்றது.

பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளான பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் காத்தான்குடியைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *