Headlines

பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் செய்ய மாட்டார்




ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தற்போதைக்கு இலங்கைக்கு விஜயம் செய்ய மாட்டார் என தெரிவிக்கப்படுகிறது.

பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் செய்வது குறித்த நிகழ்ச்சி நிரல்கள் எதுவும் கிடையாது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்னின் இலங்கை விஜயத்தின் பின்னர் பான் கீ மூன் இலங்கை விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தற்போதைக்கு பான் கீ மூன் இலங்கை விஜயம் செய்வது குறித்த எந்த திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹேசினி கொலன்னே தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *