Headlines

தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை!




தேசிய பாதுகாப்பு சம்பந்தமாக எடுக்க வேண்டிய சகல நடவடிக்கைகளையும் பொலிஸார் எடுத்துள்ளதாகவும் இதனால், தேசிய பாதுகாப்பு தொடர்பில் அச்சமோ சந்தேகமோ கொள்ள தேவையில்லை என ஓய்வுபெறவுள்ள பொலிஸ் மா அதிபர் என். கே. இளங்கக்கோன் தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று (6) ராமஞ்ஞைய பௌத்த பீடத்தின் நாபான பிரேமசிறி நாயக்க தேரரை சந்தித்த பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

பொலிஸ் மா அதிபராக பதவி வகித்த 5 வருட காலத்தில் பொலிஸ் சேவையின் தரத்தை உயர்த்தவும் பொலிஸாரின் நலன்புரி வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விரைவில் தான் ஓய்வுபெற்று சென்றாலும் அந்த திட்டங்கள் அனைத்தும் அமுலில் இருக்கும் எனவும் இளங்கக்கோன் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *