Headlines

வெலேசுதாவுக்கு மீண்டும் விளக்கமறியல்




பல கோணங்களிலும் சேகரித்து வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணம் குறித்து, பண மோசடி குற்றச்சாட்டின் பெயரில் சந்தேகத்தின் பெயரில் கைதாகியுள்ள போதைப்பொருள் கடத்தல் மன்னன் வெலே சுதா உட்பட எட்டுப் பேருக்கான விளக்கமறியல் எதிர்வரும் 18ம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் கிஹான் பிளபிடிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அவர்களுக்கு எதிரான வழக்கினை எதிர்வரும் ஜூன் மாதம் விவாதத்திற்கு எடுத்துகொள்ளப்படுவதோடு,அதுவரையில் 14நாட்களுக்கு ஒருதரம் நீதிமன்றில் ஆஜராக்குமாறும் சிறைச்சாலை அதிகாரிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்னும், ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரத்தில் மற்றுமொரு வழக்கில் குற்றவாளியான வெலேசுதாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *