Headlines

நிஷாந்தவுக்கு பிணை மறுப்பு




சி.எஸ்.என் தொலைகாட்சி ஊடாக இடம்பெற்ற பாரிய முறைகேடுகள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த யோசித்த ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர், நிஷாந்த ரணதுங்கவுக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது.

மேலும், யோசித்த உள்ளிட்ட நால்வருக்கு ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் 10 இலட்சம் ரூபா சரீரப் பிணைகள் இரண்டில் விடுவித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீதிமன்ற அனுமதியின்றி சந்தேகநபர்கள் வெளிநாடு செல்வது தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *