Headlines

யோசித்தவின் மனு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோசித்த ராஜபக்ஸ வெளிநாடு செல்வதற்காக தாக்கல் செய்திருந்த மனு இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. சீ.எஸ்.என் தொலை காட்சி நிறுவனத்தில் இடம் பெற்ற மோசடி தொடர்பாக யோசித்தவின் வெளிநாட்டு பயணம் தடை செய்யப்பட்டிருந்தது. எனவே,மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதித்தருமாறு யோசித்த இந்த மனுவை அவரது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தார். யோசித்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் திகதி…

Read More

100 மில்லியன் ரூபா நட்டஈடு கோரும் CSN

சீ.எஸ்.என்.தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவர் ரொஹான் வெலிவிட்ட விஜய நியுஸ் பேப்பர் நிறுவனத்திடம் 100 மில்லியன் ரூபா நட்டஈடு கோரியுள்ளார். தனது சட்டத்தரணி நிலந்த விஜேசிங்க ஊடாகவே இவர் குறித்த நட்டஈட்டு பணத்தை கோரியுள்ளார். இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் குறித்த நிறுவனத்தின் சிங்கள நாளிதழ் ஒன்றில் வெளியான செய்திக்கு எதிர்ப்பு தெரிவித்தே, ரொஹான் இந்த நட்டஈட்டு தொகையை கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பத்திரிகை செய்தியில், ‘சீ.எஸ்.என்.தொலைக்காட்சி நிறுவனத்தின் 157.5 மில்லியன் ரூபா நிதி அரசுடமையாக்கப்பட்டுள்ளது’ என்ற தலைப்பின்…

Read More

சீ.எஸ்.என் மோசடி விவகாரம்: நிதியை இடமாற்ற உத்தரவு!

சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தின் மூலம் சட்டவிரோதமான முறையில் சேகரிக்கப்பட்ட நிதி 157.5 மில்லியன் பணத்தை மத்திய வங்கிக்கு இடமாற்றுமாறு கடுவலை நீதவான் உத்தரவிட்டுள்ளார். நிதி மோசடி விசாரணை பிரிவின் வேண்டுகோளுக்கு இணங்கவே இந்த உத்தரவு கடுவலை நீதவானால் பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

நாடு கடத்தப்பட்ட மஹிந்தவின் பேச்சாளர்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் குருநாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் பேச்சாளரும், சீ.எஸ்.என் தொலைக்காட்சி சேவையின் தலைவருமான ரொஹான் வெலிவிட்ட சிங்கப்பூரில் இருந்து நாடுகடத்தப்பட்டுள்ளார். சிங்கப்பூரில் நடைபெறும் ப்ரோட்காஸ்ட் ஏசியா கண்காட்சியில் பங்கேற்பதற்காக அவர் கடந்த செவ்வாய்க்கிழமை சிங்கப்பூருக்கு சென்றிருந்தார். எனினும் விமான நிலையத்தில் 3 மணித்தியாலங்களாக விசாரணைக்கு உட்படுத்திய சிங்கப்பூரின் குடிவரவு குடியகழ்வுத் திணைக்கள அதிகாரிகள் அவரை இலங்கைக்கு திருப்பியனுப்பியுள்ளனர்.

Read More

பொலிஸ் நிதி குற்றப் பிரிவில் யோஷித!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ பொலிஸ் நிதி குற்றப் பிரிவில் வாக்கு மூலமொன்றினை வழங்க சற்றுமுன்னர் ஆஜராகியுள்ளார். சீ.எஸ்.என். தொலைக்காட்சி நிலையம் தொடர்பில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் வாக்கு மூலம் வழங்குவதற்கு நேற்றும் பொலிஸ் நிதி குற்றப் பிரிவிற்கு யோஷித சென்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

நிஷாந்தவுக்கு பிணை மறுப்பு

சி.எஸ்.என் தொலைகாட்சி ஊடாக இடம்பெற்ற பாரிய முறைகேடுகள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த யோசித்த ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர், நிஷாந்த ரணதுங்கவுக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது. மேலும், யோசித்த உள்ளிட்ட நால்வருக்கு ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் 10 இலட்சம் ரூபா சரீரப் பிணைகள் இரண்டில் விடுவித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்ற அனுமதியின்றி…

Read More

யோஷிதவுக்கு பிணை

– அலுவலக செய்தியாளர் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு  பிணை வழங்கப் பட்டுள்ளது. சந்தேகநபர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனுவை ஆராய்ந்த கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (14) இந்த நால்வருக்கும் பிணை வழங்கியுள்ளது.

Read More

யோஷிதவுக்கு எதிரான ஆதாரங்கள் அழிப்பு

சி.எஸ்.என். தொலைக்காட்சி மூலம் பொதுச்சொத்து துஷ்பிரயோகம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் மகன் லெப்.யோஷித ராஜபக்ச உள்ளிட்டவர்களுக்கு எதிரான இணைய ஆதாரங்கள் சில வெளிநாட்டில் இருந்து செயற்படும் அடையாளம் தெரியாத நபர்களினால் அழிக்கப்பட்டுள்ளன. கனடா, அவுஸ்திரேலியாவில் இருந்தே இவ்வாறு அந்த சான்றுகள் அழிக்கப்பட்டுள்ளமை கணினி அவசர நிலைமைகள் தொடர்பிலான ஆய்வகத்தினால் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த நடவடிக்கைக்காக சி.எஸ்.என். நிறுவனத்தின் முன்னாள் தகவல் தொழில் நுட்ப முகாமையாளரின் மின்னஞ்சலே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் நிதிக் குற்றப்…

Read More

யோஷிதவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கடுவளை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சீ.எஸ்.என் எனும் தொலைக்காட்சி நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில், குறித்த ஐவரும் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், சி.எஸ்.என் தொலைக்காட்சி தொடர்பான வழக்கு விசாரணைக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோஷித ராஜபக்ஷ உட்பட ஐந்து பேர் இன்று காலை கடுவலை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபோதே அவர்களை தொடர்ந்தும்  மார்ச் மாதம் 24ஆம் திகதி…

Read More

மின்­னஞ்­சல்கள் அழிக்­கப்பட்­டனவா.?

யோஷித ராஜ­ப­க் ஷ­வுக்கு எதி­ரான ஆதா­ரங்­க­ளாக கரு­தப்­படும் பல மின்­னஞ்­சல்கள் வெளிநாட்டில் இருந்து செயற்­படும் ஒரு­வரால் அல்­லது குழு­வொன்­றினால் அழிக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது. சி.எஸ்.என். நிறு­வ­னத்தின் ஆரம்ப மூல­த­ன­மான 234 மில்­லியன் ரூபா எவ்­வாறு பெறப்­பட்­டது என்­பது தொடர்பில் விளக்­க­ம­ளிக்­கா­ததை அடிப்­ப­டை­யா­கவும் போலி ஆவ­ணங்­களை தயா­ரித்­தமை, திட்­ட­மிட்டு நம்­பிக்கைத் துரோகம் செய்­தமை , திட்­ட­மிட்ட மோசடி, சுங்க சட்­டத்தை மீறி­யமை மற்றும் நிறு­வன சட்­டங்­களை மீறி­யமை, அர­சாங்க சொத்­துக்­களை தவ­றாக பயன்­ப­டுத்­தி­யமை தொடர்­பிலும் கைதா­கி­யுள்ள யோஷித உள்­ளிட்ட சந்­தேகநபர்­க­ளுக்கு…

Read More

யோஷித இடைநீக்கம்

நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் லெப்டினன் யோசித ராஜபக்ச, நேற்று ஞாயிற்றுக்கிழமை அமுலுக்கு வரும் வகையில், கடற்படை சேவையிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கப்பட்டள்ளார். சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ளும் பொருட்டு, நிதி மோசடி குற்றப்புலனாய்வு பிரிவினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே பாதுகாப்பு அமைச்சு, அவரை இடைநீக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

நிஷாந்தவின் விண்ணப்பம் விசாரணைக்கு எடுக்கப்பட்டது

முன்னாள் சி.எஸ்.என். பணிப்பாளர் நிஷாந்த ரணதுங்க சார்பில் தாக்கல் செய்யப்பட்ட திருத்திய பிணை விண்ணப்பத்தை மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி என் ரணவக்க விசாரணைக்காக இன்று (19) எடுத்துக்கொண்டார். திருத்தப்பட்ட பிணை மனுவில் ரணதுங்கவின் வழக்கறிஞர் சளினிவட்டுவஹெட்டடி, சட்டமா அதிபரையும் நிதிக்குற்ற விசாரணை பிரிவின் அதிகாரிகள் இருவரையும் பிரதிவாதிகளாக குறிப்பிட்டிருந்தார். பிரதிவாதிகளை எதிர்வரும் 29ஆம் திகதி நீதிமன்றத்துக்கு வருமாறு உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது.

Read More