Headlines

இலங்கை வீரர்கள் பல பிரச்சினைக்கு முகங்கொடுத்தனர் – தயாசிறி!




தெற்காசியா விளையாட்டுப் போட்டிகளில் கலந்துக் கொண்ட இலங்கை வீரர்களுக்கு பல அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளமை உண்மை என விளையாட்டு துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 12 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் .இந்தியாவில்  நடைபெற்று முடிவடைந்திருக்கும் நிலையில் அங்கு போட்டிகளில் கலந்துக் கொள்ளச்  சென்ற இலங்கையின் விளையாட்டு வீர,வீராங்கனைகள் பல்வேறு பிரச்சனைக்கு முகம் கொடுத்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மேலும் இதற்கான பொறுப்பை இந்தியாவின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளே ஏற்கவேண்டும் என அமைச்சர் தயாசிறி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்றைய (17) தினம் தெற்காசிய போட்டிகளில் நீச்சல் போட்டிகளில் சாதனைப் படைத்த வீரர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வில் கலந்துக் கொண்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *