Headlines

தேசிய வைத்தியசாலையில் வேலை நிறுத்த போராட்டம்




கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மருத்துவ ஆய்வுகூட அதிகாரிகள் இன்று (28) காலை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக மருத்துவ சேவைகள் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் இடம்பெறுவதாக அதன் தலைவர் அஜித். பீ. திலகரத்ன கூறினார்.

குறித்த கோரிக்கைகள் தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தாவிட்டால் மேலும் பரந்தளவிலான போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *