Headlines

ஞானசார தேரருக்கு பிணை வழங்க மறுப்பு

பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஹோமாகம நீதிவான் நீதிமன்றத்தில் இன்று (28) காலை ஞானசார தேரரை பிணையில் விடுதலை செய்யுமாறு கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட ஹோமாகம நீதிவான் நீதிமன்ற நீதிபதி ரங்க திஸாநாயக்க பிணை மனுவை நிராகரித்தள்ளார். காணாமல் போனதாக கூறப்படும் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியை, ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் வைத்து திட்டிய குற்றஞ்சாட்டின் அடிப்படையில் ஞானசார…

Read More

டின் மீன்களுக்கு இறக்குமதி வரி அதிகரிப்பு

தகரத்தில் அடைக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ டின் மீனுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். முன்னதாக 50 ரூபாவாக இருந்த இந்த வரியை தற்போது 100 ரூபா வரை அதிகரிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Read More

ஞானசாரருக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கை, மேற்கொள்ள சட்டத்தரணிகள் ஆர்வம்

நீதி­மன்ற அவ­ம­திப்பு மற்றும் அர­சாங்க அதி­கா­ரி­க­ளுக்கு அச்­சு­றுத்தல் விடுத்த குற்­றச்­சாட்­டுக்­களின் கீழ் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள பொது பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேர­ருக்கு எதி­ராக மேல­திக சட்ட நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­பது குறித்து சட்­டத்­த­ர­ணிகள் சங்கம் விசேட அவ­தானம் செலுத்­தி­யுள்­ள­தாக  ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.எம்.ஸுஹைர் விடிவெள்ளிக்குத் தெரி­வித்தார். இந்த விடயம் தொடர்பில் சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்தின் தலைவர் ஜெப்ரி அழ­க­ரட்­னத்தை நேரில் சந்­தித்து தான் கலந்­து­ரை­யா­டி­ய­தா­கவும்  ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.எம்.ஸுஹைர் மேலும்…

Read More

“சிக்கா” தொடர்பில் அவதானத்துடன் செயற்பட, இலங்கையர்களுக்கு கோரிக்கை

சிக்கா வைரஸ் தொற்று பரவும் நாடுகளுக்கு பயணிக்கும் இலங்கை சுற்றுலா பிரயாணிகளை அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு ம்ககளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த வைரஸ் தொற்று இலங்கையில் இது வரையில் கண்டறியப்படவில்லை என அமைச்சின் தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ஆனந்த அமரசிங்க தெரிவித்துள்ளார். எனினும் லத்தீன் அமெரிக்கா வலயத்தின் பிரேசில், கொலம்பியா உள்ளிட்ட 28 நாடுகளில் இந்த வைரஸ் தொற்று பரவியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. டெங்கு…

Read More

ஹோமாகம நீதிமன்றின் முன் ஆர்பாட்டம் செய்த மூன்று பேர் கைது

ஹோமாகம நீதிமன்றத்தில் நுழைந்து நீதிமன்றை அவமதிக்கும் வித்தில் நடந்துகொண்ட ஞானசார தேரர்  அக் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அன்றையதினம் (25) நீதிமன்றின் முன்னால் அத்துமீறிய செயற்பாடுகளில் ஈடுபட்டோரை கைது செய்து அடுத்த வழக்கு தினத்தில் மன்றில் சமர்ப்பிக்குமாறு ஹோமாகம நீதிமன்றம் நேற்று (27) உத்தரவிட்டிருந்து. இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் முச்சக்கர வண்டி சாரதி உட்பட மூவர் இன்று (28) கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

டென்மார்க்கின் அகதிகள் சட்டத்துக்கு ஐ.நா. கண்டனம்

டென்­மார்க்­கிற்குச் செல்லும் அக­தி­களின் எண்­ணிக்­கையைக் குறைக்கும் நோக்கில், அந்­நாட்டு நாடா­ளு­மன்றம் சர்ச்­சைக்­கு­ரிய சட்டம் ஒன்றை ஏற்­றுக்­கொள்ள எடுத்த முடி­வுக்கு, ஐ.நா. கடும் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ளது. அக­தி­களின் சில உடை­மை­களைக் கைப்­பற்ற அதி­கா­ரி­க­ளுக்கு அந்தச் சட்­டத்தின் கீழ் அதி­காரம் வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது. அக­தி­களின் 1,500 டொலர்­க­ளுக்கு மேற்­பட்ட சொத்­துக்­களை பறி­முதல் செய்ய வழி செய்யும் இந்தச் சட்டம், அக­தி­களின் உற­வி­னர்கள் டென்மார்க் வரு­வ­தையும் கடி­ன­மாக்­க­வுள்­ளது. அக­தி­களால் நாட்­டிற்கு ஏற்­படும் செலவை ஈடு­கட்ட, அந்த நட­வ­டிக்கை உதவும் என்று டென்மார்க் கூறு­கி­றது. இத­னி­டையே ஐ.நா….

Read More

தெற்காசிய விளையாட்டு விழாவில் பதக்கம் வெல்பவர்களுக்கு பணப்பரிசு

– எஸ்.ஜே.பிரசாத் – தெற்­கா­சிய விளை­யாட்டு விழாவில் பதக்­கங்கள் வென்­றெ­டுக்கும் இலங்கை வீர, வீராங்­க­னை­க­ளுக்கு பணப்­ப­ரிசு வழங்­கப்­படும் என விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயாசிறி ஜய­சே­கர தெரி­வித்­துள்ளார். தங்கப் பதக்­கத்­திற்கு 5 இலட்சம் ரூபாவும் வெள்ளிப் பதக்­கத்­திற்கு 3 இலட்சம் ரூபாவும் வெண்­கலப் பதக்­கத்­துக்கு ஒரு இலட்சம் ரூபாவும் வழங்­கப்­படும் என அவர் குறிப்­பிட்டார். 12ஆவது தெற்­கா­சிய விளை­யாட்டு விழா அடுத்த மாதம் 5ஆம் திகதி முதல் 16ஆம் திக­தி­வரை இந்­தி­யாவின் அசாம் மாநி­லத்தில் நடை­பெ­று­கி­றது. இந்த விளை­யாட்டுப்…

Read More

பெண்கள் வெறுமனே பிள்ளை பெறும் இயந்திரங்கள் இல்லை – அமீர் அலி

– அபூ செய்னப் – பெண்கள் வெறுமனே பிள்ளை பெறும் இயந்திரங்கள் இல்லை,அவர்கள் வினைத்திறன் மிக்கவரகள்,நேர்த்தியான சமூக கட்டமைப்பினை உறுவாக்குவதில் முன்நிறபவர்கள் என கிராமிய பொருளாதார அலுவல்களுக்கான பிரதி அமைச்சர் அமீர் அலி தெரிவித்தார். தேசிய விளையாட்டு வாரத்தை முன்னிட்டு விளையாட்டுத் துறை  அமைச்சும் கோறளைப்பற்று மேற்கு ஒட்டமாவடி பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய  விளையாட்டு மற்றும்  உடல்  ஆரோக்கிய விருத்தி வாரம் மற்றும் விசேட தின நிகழ்வில் பிரதம அதிதியாக  பிரதி அமைச்சர் அமீர் அலி…

Read More

தொடர்ந்து விளம்பர அறிவிப்பு செய்த பெண்: ஆத்திரத்தில் கொலை செய்த ஆசாமி

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் நவீன ஆடையகத்தில் தொடர்ந்து விளம்பர அறிவிப்பு செய்த பெண்ணை நபர் ஒருவர் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாஸ்கோவில் நவீன ஆடையகம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார் 25 வயதான அன்னா நசோவா என்பவர். இவர் தனது ஆடையகத்தில் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு தொடர்ச்சியாக ஒலிபெருக்கியில் விளம்பரம் செய்து வந்துள்ளார். இவரது கடை அமைந்துள்ள அதே கட்டிடத்தில் குடியிருந்து வருகிறார் 58 வயதான ஸெர்ஜி கிளாக்கோவ் என்பவர். ஆடையகத்தில் இருந்து தொடர்ச்சியான…

Read More

திலங்கவிடம் 1000 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரும் அர்ஜூன

பிரதிசபாநாயகரும் ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் தலைவருமான திலங்க சுமதிபாலவிடம் 1000 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க சட்டக்கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். தமக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதாக கூறியே இந்த நட்டஈடு கோரப்பட்டுள்ளது. இந்த மாத முதல்பகுதியில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா கிரிக்கட்டுக்கான தேர்தலில் திலங்க சுமதிபால வெற்றி பெற்றார். இதனையடுத்து போட்டியில் தோல்வியடைந்த அமைச்சர் அர்ஜூன ரணதுங்க கிரிக்கட் வியாபார மாபியாவின் கைகளுக்கு சென்று விட்டதாக குறிப்பிட்டார். இதனையடுத்து திலங்க சுமதிபால தெரிவித்த…

Read More

சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள சம்பூர் பாலகனின் மரணம்

சம்பூர் பகுதியையே சோகத்துக்குள்ளாக்கியுள்ள ஆறு வயதுப் பாலகனான குகதாஸ் தருஷனின் மரணத்தின் மர்மத்தை மருத்துவ அறிக்கைகள் மூலமோ அல்லது விசாரணை அறிக்கைகள் மூலமோ முழுமைக் கண்டு பிடிக்கப்பட முடியாத நிலையில் பல்வேறு சந்தேகங்கள், ஊகங்கள் எழுந்துள்ளன. இதேவேளை சிறுவனின் மரணம் தொடர்பில் உடனடியான முடிவுக்கு வரமுடியவில்லை. அத்துடன் தேவையான ஆதாரங்களை திரட்டியதன் பேரிலும் பல்வேறு பரிசோதனைகளையும் ஆய்வுகளை மேற்கொண்டதன் பேரிலுமே மரணத்துக்கான காரணத்தைக் கூற முடியும் என திருகோணமலை பொது வைத்தியசாலையின் இரசாயனப் பகுப்பாய்வு மற்றும் மருத்துவ…

Read More

தெற்கு அதிவேக வீதியில் வாகனங்கள் மீது கல்வீச்சு

தெற்கு அதிவேக வீதியில் பயணித்த வாகனங்கள் மீது கற்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவசர பொலிஸ் சேவை மற்றும் மோட்டார் சைக்கிள் பொலிஸாரின் எண்ணிக்கை வீதியில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மேலதிகமாக தெற்கு அதிவேக வீதிக்கு அண்மித்த பிரதேசங்களிலும் பொலிஸ் நடமாட்டம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் வீதிப் பாதுகாப்பு மற்றும் வாகனம் தொடர்பான பதில் பொலிஸ்மா அதிபர் அமரசிரி தெரிவித்துள்ளார். அதிவேக வீதியின் 21 ஆவது மைற்கல்லுக்கு அண்மையில் இருவர் வீதியில் பயணித்த வாகனங்கள் மீது கற்களை வீசியதாக முறைப்பாடு கிடைத்துள்ளதுடன் 6 வாகனங்கள்…

Read More