Headlines

கால்நடை மருத்துவர்கள் வேலைநிறுத்தம்

கால்நடை மருத்துவர்கள் இன்று (9) காலை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகும் இவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் 48 மணித்தியாலங்களுக்கு முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் விலங்கு உற்பத்தி, சுகாதார துறையில் அரசியல் திருத்தம், சம்பள பிரச்சினைகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இவர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று சந்தைகளில் இறைச்சிகளை பெற்றுக்கொள்வதில் மக்கள் சிரமங்களை எதிர்கொள்ளுவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் சந்தைகளுக்கு விநியோகிக்கப்படும் இறைச்சிகளை…

Read More

நல்லாட்சிக்கு வைத்தியர்கள் எச்சரிக்கை!

அரச வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அடையாள வேலைநிறுத்தப் போராட்டமொன்றில் ஈடுபடவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. முதல் கட்ட நடவடிக்கையாக எதிர்வரும் 04 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 8.00 மணி முதல் 12.00 மணி வரையில் வைத்தியர்கள் போராட்டம் நடத்தவுள்ளனர். எட்கா உடன்படிக்கை கைச்சாத்திடப்படல் மற்றும் மாலபே சயிட்டம் தனியார் வைத்திய கல்லூரியின் மாணவர்களை வைத்தியசாலையில் அனுமதி வழங்குவதற்கு முயற்சித்தல், வெளிநாட்டு பயிற்சிகளை முடித்து வரும் வைத்தியர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை வழங்காமை உள்ளிட்ட…

Read More

சம்பள அதிகரிப்பை கோரும் புகையிரத தொழிற்சங்கம்

சம்பளத்துடன் இணைத்து மேலும் பல கொடுப்பனவுகளை புகையிரத தொழிற்சங்கங்கள் கோரியுள்ளன. இதேவேளை 10,000 ரூபாய் சம்பளம் உள்ளிட்ட மேலதிக கொடுப்பனவுகளை வழங்குவதற்கு புகையிரத திணைக்களம் இதுவரை வழங்க முன்வராமை குறித்து புகையிரத தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. தமது கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படாத பட்சத்தில் தமது சங்கம் கடும் நடவடிக்கை எடுக்கும் என புகையிரத தொழிற்சங்கங்களின் ஏற்பாட்டாளரான ஜானக பெர்னான்டோ தெரிவித்துள்ளார். அத்துடன் தமது கொடுப்பனவுகள் அதிகரிப்பை அமைச்சரவை அங்கீகரித்துள்ள போதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்காமல் உள்ளதாகவும்…

Read More

சொகுசு பஸ் நடத்துனர்கள் பணி பகிஷ்கரிப்பு

காலி – கொழும்பு சொகுசு பஸ் நடத்துனர்கள் இன்று (6) காலை முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். காலி – கொழும்பு அதிவேக பாதையில் புதிய நான்கு பஸ்களை சேர்த்துக்கொள்ளப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக பஸ் நடத்துனர்கள் தெரிவித்துள்ளர்.

Read More

தேசிய வைத்தியசாலையில் வேலை நிறுத்த போராட்டம்

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மருத்துவ ஆய்வுகூட அதிகாரிகள் இன்று (28) காலை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக மருத்துவ சேவைகள் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் இடம்பெறுவதாக அதன் தலைவர் அஜித். பீ. திலகரத்ன கூறினார். குறித்த கோரிக்கைகள் தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தாவிட்டால் மேலும் பரந்தளவிலான போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Read More

16 தொழிற்சங்கங்கள் நாளை பணிப்பகிஷ்கரிப்பு

அரச மருத்துவ சங்கம் உட்பட 16 தொழிற்சங்கங்கள் நாளை காலை 8 மணி முதல் பணிப் பகிஷ்கரிப்பை மேற்கொள்ள உள்ளன. வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராகவே இந்த பணிப் பகிஷ்பரிப்பை மேற்கொள்ள உள்ளனர்.

Read More

தபால் திணைக்களப் பிரச்சினைகள் குறித்து விசேட கலந்துரையாடல்

தபால் திணைக்களத்தில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் விஷேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க சம்மேளன ஒன்றியம் தெரிவித்துள்ளது. தமது பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட மேலதிக செயலாளருடனேயே இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தபால் தொழிற்சங்க சம்மேளன ஒன்றியத்தின் இணைப்பாளர் சிந்தக்க பண்டார குறிப்பிட்டுள்ளார். தபால் திணைக்களத்தில் நிலவும் சில பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத் தருமாறு கோரி கடந்த 13ம் திகதி ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுத்தனர். இன்று இடம்பெறும் கலந்துரையாடல்களின் பின்னர்…

Read More

நாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

– க.கிஷாந்தன் – தபால் ஊழியர்கள் 14 கோரிக்கைகளை முன்வைத்து சுகயீன விடுமுறை என்ற அடிப்படையில் நாடளாவிய ரீதியில் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில் 12. ஆம் திகதி நள்ளிரவு முதல் பிரதான தபால் நிலையங்கள மற்றும் உப தபால் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் 13.11.2015 அன்று காலை விநியோகிக்கப்படவிருந்த தபால்கள் நிலையங்களில் தேங்கி கிடப்பதாக தெரியவந்துள்ளது. இதன் காரணமாக பொது மக்கள் தங்களுடைய கடிதங்களை பெற்றுக்கொள்வதிலும் அவசர விடயங்களில் ஈடுப்படுவதிலும் முடியாமல் பல்வேறுப்பட்ட அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக பொது…

Read More