Headlines

முஸ்லிம் மாணிக்க வியாபாரி மடகஸ்காரில் கொலை




இலங்கை – காலி பிரதேசத்தில் வசித்து வந்தவரும் தெல்தோட்டையை பிறப்பிடமாகக் கொண்ட பிரபல மாணிக்க வியாபாரியான நயிம் ஹாஜியார் (வயது-56) மடகஸ்காரில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மாணிக்க வியாபாரத்தில் ஈடுபடுவதற்கு மடகஸ்கார் சென்ற போது இவர் தங்கியிருந்த அறையில் வைத்தே இவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர் தன்னுடன் கொண்டு சென்ற பணம் மற்றும் பெறுமதியான பொருட்கள் என்பனவும் கொள்ளையிடப்பட்டுள்ளன.

இவரின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் இரு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதுடன் இவரது ஜனாசா நேற்று மடகஸ்காரில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *