Headlines

வசிம் தாஜூடின் கொலையுடன் இரண்டு பேருக்கு நேரடித் தொடர்பு

ரகர் வீரர் வசிம் தாஜூடின் கொலையுடன் இரண்டு பேருக்கு நேரடித் தொடர்பு காணப்படுவதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த இருவரும் விரைவில் கைது செய்யப்படவுள்ளனர். விசாரணைகளின் மூலம் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஏனைய சந்தேக நபர்களின் தொடர்புகள் குறித்து ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருவதாகவும், உறுதியாக ஆதாரங்கள் காணப்படும் இரண்டு சந்தேக நபர்கள் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாகவும் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வசிம் தாஜூடின் கொலை குறித்த விசாரணைகளை…

Read More

தாஜூடின் கொலை: சந்தேகநபர்களை கைது செய்யுமாறு உத்தரவு

ரக்பி வீரர் வசீம் தாஜூடினின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்யுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு நீதிமன்றம் இன்று (25) உத்தரவிட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதிவான் நிஷாந்த பீரிஸ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். தாஜூடினின் மரணமானது கொலையென உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான சந்தேகநபர்களை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும் வசீம் தாஜூடீன் மரணம் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்ட பாதுகாப்பு கெமராக்களில் பதிவான காட்சிகளை வெளிநாடு ஒன்று அனுப்பி மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் குறித்து…

Read More

எம்பிலிபிட்டிய குடும்பஸ்தர் கொலை வழக்கு: நாளை தீர்ப்பு

எம்பிலிப்பிட்டியவில், 29 வயதான குடும்பஸ்தரொருவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கின் சாட்சி விசாரணைகள் நேற்று புதன்கிழமையுடன் (17) முடிவடைந்த நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பு, நாளை வெள்ளிக்கிழமை (19) வழங்கப்படும் என எம்பிலிப்பிட்டிய நீதவான் பிரசன்ன பெர்ணான்டோ, நேற்று அறிவித்தார். அத்துடன், இப்படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சமில் தர்மரத்னவை, எதிர்வரும் மார்ச் மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணையின் போது,…

Read More

லசந்தவின் கொலை: பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமசிங்க கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரு நபர்களின் தகவல்களை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் குறித்த புகைப்படத்தில் உள்ள நபர் 35 வயதானவர் என்றும் 5 அடி 8 அங்குலம் உயரமான நபர் என்றும் சாம்பல் நிற கண்களும், வெள்ளை நிற மேனியுமான நபர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை மற்றுமொரு நபர் தொடர்பிலும் பொலிஸார் ஓவியமாக வரையப்பட்ட படங்களை வெளியிட்டுள்ளனர். 40 வயதான மேற்குறிப்பிட்ட நபர் 5 அடியும்,10 அங்குலமும் உடைய…

Read More

லசந்த கொலை தொடர்பில் மேலும் 10 பேரிடம் விசாரணை

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க தொடர்பில் மேலும் பத்து பேரிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. புலனாய்வுப் பிரிவினர் இந்த விசாரணகைளை மேற்கொண்டு வருகின்றனர். நுவரெலியா பிரதேசத்தைச் சேர்ந்த கிராம சேவை உத்தியோகத்தர் ஒருவர் உள்ளிட்ட பத்து பேரிடம் வாக்கு மூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் உயிரிழந்த பிச்சை ஜேசுதாசன் வசித்து வந்த கிராம சேவைப் பிரிவில் கடமையாற்றிய கிராம உத்தியோகத்தரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஜேசுதாசனுடன் தொடர்புகளைப் பேணியவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது….

Read More

இரண்டு பேருக்கு மரண தண்டனை விதிப்பு

கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் இரண்டு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 1999 ஆம் ஆண்டு இரத்தினபுரி, மன்ததெனிய பிரதேச நபர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் தொடர்பான வழக்கு 17 வருடமாக  இடம்பெற்று வந்த நிலையில் இரத்தினபுரி மேல் நீதிமன்றம் நேற்று இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஹோமாகம மற்றும் அநுராதபுரம் பகுதிகளை சேர்ந்த இருவருக்கே இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Read More

வெல்லம்பிட்டி பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி

வெல்லம்பிட்டி பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்றில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். நேற்றிரவு (10) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். முச்சக்கர வண்டியில் வந்த நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Read More

தொடர்ந்து விளம்பர அறிவிப்பு செய்த பெண்: ஆத்திரத்தில் கொலை செய்த ஆசாமி

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் நவீன ஆடையகத்தில் தொடர்ந்து விளம்பர அறிவிப்பு செய்த பெண்ணை நபர் ஒருவர் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாஸ்கோவில் நவீன ஆடையகம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார் 25 வயதான அன்னா நசோவா என்பவர். இவர் தனது ஆடையகத்தில் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு தொடர்ச்சியாக ஒலிபெருக்கியில் விளம்பரம் செய்து வந்துள்ளார். இவரது கடை அமைந்துள்ள அதே கட்டிடத்தில் குடியிருந்து வருகிறார் 58 வயதான ஸெர்ஜி கிளாக்கோவ் என்பவர். ஆடையகத்தில் இருந்து தொடர்ச்சியான…

Read More

தாஜூதீனின் கொலையுடன் தொடர்புடையோர் இம் மாத இறுதிக்குள் கைது

பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூதீனின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இந்த மாத இறுதிக்குள் கைது செய்யப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாஜூதீனின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்ய உள்ளனர். இதேவேளை,தாஜூதீனை கொலை செய்யுமாறு உத்தரவிட்டவர்கள் யார் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. விஞ்ஞானபூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளதாகத்தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி சிராந்தி ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, லெப்டினன்…

Read More

முஸ்லிம் மாணிக்க வியாபாரி மடகஸ்காரில் கொலை

இலங்கை – காலி பிரதேசத்தில் வசித்து வந்தவரும் தெல்தோட்டையை பிறப்பிடமாகக் கொண்ட பிரபல மாணிக்க வியாபாரியான நயிம் ஹாஜியார் (வயது-56) மடகஸ்காரில் கொலை செய்யப்பட்டுள்ளார். மாணிக்க வியாபாரத்தில் ஈடுபடுவதற்கு மடகஸ்கார் சென்ற போது இவர் தங்கியிருந்த அறையில் வைத்தே இவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர் தன்னுடன் கொண்டு சென்ற பணம் மற்றும் பெறுமதியான பொருட்கள் என்பனவும் கொள்ளையிடப்பட்டுள்ளன. இவரின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் இரு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதுடன் இவரது ஜனாசா நேற்று மடகஸ்காரில் நல்லடக்கம்…

Read More