Headlines

கைதிகள் விடுதலையால் பாதுகாப்பிற்கு பிரச்சினையில்லை




பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மேலும் சில தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவது தேசிய பாதுகாப்பிற்கு பிரச்சினையல்லவென நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று முற்பகல் இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இந்தநிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேலும் 20 தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணைகள் நிறைவுறுத்தப்பட்டு விடுவிக்க தீர்மானித்துள்ளதாக நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *