Headlines

ஊவாவில் இன்று தபால் மூல வாக்களிப்பு




ஊவா மாகாண சபை தேர்தலுக்கான தபால் வாக்களிப்பு இன்று 4ம் திகதி மற்றும் நாளை 5ம் திகதியும் இடம்பெறவுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி றோஹன கீர்த்தி திசாநாயக அறிவித்துள்ளார்.

இம் மாவட்டத்திலுள்ள அரச திணைக்களங்களிலும், காரியாலயங்களிலும் சேவை புரிகின்ற அரச ஊழியர்கள் தத்தமது தலைமைக்காரியாலயத் தலைவரின் சிபார்சுக்கமைய காலை 9 மணி முதல் 3 மணி வரை தபால் வாக்களிப்பில் கலந்துகொள்ள முடியும்.

ஏலவே கொடுக்கப்பட்டுள்ள தேர்தல் அறிவுரைக்கமைய இவ்வாக்களிப்புக்கு விண்ணப்பித்த அரச ஊழியர்களை வாக்களிக்குமாறு தேர்தல் திணைக்களம் கேட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *