Headlines

கொழும்பு விளக்கமறியல் சிறையின் பாதுகாப்பு பொலிஸார் வசம்

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையின் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் சிறைச்சாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இதுவரை சிறை அதிகாரிகளே பொறுப்பாக இருந்ததாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம தெரிவித்தார்.விளக்கமறியல் சிறையில் இடம்பெறும் அநியாயங்களை கருத்திற் கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.இதேவேளை, சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு புதிதாக 50 மோட்டார் சைக்கிள்கள் நேற்று மாலை வழங்கப்பட்டுள்ளன.

Read More

10 ரூபாய் கேட்டதற்காக மருமகளை கொன்ற மாமா

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள சாகேப்கஞ்ச் பகுதியில் ஆசிரியர் தின விழாவிற்காக 10 ரூபாய் பணம் கேட்ட 11 வயது மாணவியை அவரது தந்தை வழி மாமா அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாகேப்கஞ்சில் உள்ள பிந்துதாம் நடுநிலை பள்ளியில் படிக்கும் காஜல் குமாரி என்ற அப்பெண் தனது பாட்டியிடம் ஆசிரியர் தினத்திற்கான தபால் தலை வாங்க பத்து ரூபாய் வழங்குமாறு கேட்டுள்ளார். அப்போது பாட்டியின் அருகில் இருந்த அப்பெண்ணின் தந்தை வழி மாமா அவளது…

Read More

தவ்ஹீத் ஜமாத் அமைப்புக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

தவ்ஹீத் ஜமாத் தலைவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வது குறித்து ஆராய்ந்து வருவதாக கொழும்பு நீதவான் நீதிமன்றில் பொலிஸார் இன்று (04) தெரிவித்துள்ளனர். பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாக தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கொழும்பு பிரதான நீதவான் ஜிஹான் பிலபிட்டிய முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது பொலிஸார் இதனை அறிவித்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய அறிக்கை ஒன்று சட்டமா அதிபர் திணைக்களத்திடம் சமர்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டினர். மேலும்…

Read More

ஐ.நா. விசாரணை செயற்பாடானது சர்வதேச சட்டங்களையும் இலங்கையின் இறைமையையும் மீறுவதாக அமைந்துள்ளது

 ஐக்கிய நாடுகள் விசாரணை செயற்பாடானது சர்வதேச சட்டங்களையும் இலங்கையின் இறைமையையும் மீறுவதாக அமைந்துள்ளது. அதனாலேயே அதனை இலங்கை எதிர்ப்பதுடன் நிராகரித்துள்ளது என்று அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.இலங்கையின் மனித உரிமை விவகாரத்தை உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது நீதியற்ற செயல். வெளி ஊக்குவிப்புக்களின் அக்கறைக்கு ஆதரவளிக்கும் வகையிலான ஐக்கிய நாடுகளின் விசாரணைகான முனைப்புகள் உள்நாட்டு நல்லிணக்க செயற்பாடுகளை ஸ்திரமற்றதாக்கிவிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.நியூயோர்க் டைம்ஸின் ஆசிரியர் தலையங்கத்தில் வெளியிடப்பட்ட கருத்துக்கு பதிலளித்துள்ள அவர்…

Read More

ஆசிரியையை நான்கு நாட்களாக காணவில்லை

பசறை – வோனகலை தமிழ் மகா வித்தியாலயத்தின் ஆரம்ப கல்வி பிரிவு ஆசிரியை ஒருவர் காணாமல் போயுள்ளார். பசறை 10 ஆம் கட்டை பகுதியை சேர்ந்த எஸ். சரஸ்வதி (35 வயது) என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு கடந்த திங்கட்கிழமை காணாமல் போயுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வழமைப் போல் பாடசாலைக்கு சென்ற குறித்த ஆசிரியை மாலை வரை வீடு திரும்பாததையடுத்து அவரது கணவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு…

Read More

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய யானை பலி

கிராந்துருகோட்டைப் பகுதியில் காட்டு யானை ஒன்று துப்பாக்கிச் சூட்டுக்கு  இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.ஊவா மாகாணசபைத் தேர்தல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அரசியல் கட்சி ஆதரவாளர்களே இவ்வாறு யானையை சுட்டுள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.வன ஜீவராசிகள் திணைக்களமும் பொலிஸாரும் இணைந்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (VK)

Read More

தடம்புரண்டது ரயில்: மலையகத்துக்கான ரயில் சேவைகள் பாதிப்பு

 (க.கிஷாந்தன்) கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து பதுளை நோக்கிச் சென்ற பொடி மெனிக்கே  ரயில் கலபொட மற்றும் ஹிங்குருஓயா இடையிலான பகுதியில் தடம்புரண்டதால் மலையகத்திற்கான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.ரயில் போக்குவரத்தை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் மேலும் தெரிவித்துள்ளது. (VK)

Read More

எரிபொருள் நிரப்பும் போது முச்சக்கரவண்டி தீப்பற்றியதில் சாரதி படுகாயம்! யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம், நாச்சிமார் கோவிலடியை சேர்ந்த ரி.சிவதர்சன் (வயது 24) என்பவரே எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவராவார். முச்சக்கரவண்டிக்கு எரிபொருள் நிரப்பும் போது, திடீரென தீப்பற்றியது. இதன்போது, அங்கு நின்றவர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுந்துள்ளனர். சம்பவத்தில், குறித்த முச்சக்கரவண்டிக்கு பாரிய சேதம் ஏற்படவில்லை என்ற போதிலும் அதன் சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை. மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிராக வழக்கு?

ம்மை இழிவுபடுத்தியதாகத் தெரிவித்து கடுவெல நகரசபையின் தலைவர் ஜீ.எச்.புத்ததாச வழக்குத் தாக்கல் செய்துள்ளார். 2014ம் ஆண்டில் விமலின் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியினால் பிரசுரிக்கப்பட்ட பத்திரிகையொன்றில் தம்மை இழிவுபடுத்தி தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பஞ்சாயுதம் என்ற பெயரில் இந்த பத்திரிகை பிரசுரமாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. தமது நற்பெயருக்கு களங்கம் எற்படுத்தியமைக்காக அமைச்சர் விமல் வீரவன்ச ஐந்து கோடி ரூபா நட்ட ஈடு வழங்கப்பட வேண்டுமென புத்ததாச கோரியுள்ளார். கொழும்பு மாவட்ட நீதிமன்றில் இன்று இந்த வழக்குத் தாக்கல்…

Read More

ஜனாதிபதித் தேர்தலை 2016 வரை நடத்த வேண்டிய தேவை சட்டத்தில் இல்லை: எம்.ஏ சுமந்திரன்

ஜனாதிபதித் தேர்தல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறுமா அல்லது மார்ச் மாதம் நடைபெறுமா என்று பலதரப்புகளிலும் இருந்து கேள்விகள் எழுகின்றன. ஆயினும், ஜனாதிபதி தேர்தலை 2016ஆம் ஆண்டு வரை நடத்தவேண்டிய தேவை சட்டத்தில் கிடையாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கம், கொழும்பில் நேற்று புதன்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஜனாதிபதி…

Read More

குழாய்க் கிணறுகள் கையளிப்பு!

காத்தான்குடி சமாதான ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வறிய குடும்பங்களுக்கு குழாய்க் கிணறுகள் கையளிக்கம் நிகழ்வு அணுசரனையாளர்களின் பங்கு பற்றலுடன் காத்தான்குடி, ஏறாவுர், பாலமுனை மற்றும் மஞ்சந்தொடுவாய் போன்ற பிரதேசங்களில் கடந்த செவ்வாய்க் கிழமை இடம் பெற்றது. இதன் போது 15 கிணறுகள் கையளிக்கப் பட்டது.

Read More

வறட்சியால் சிறுகடற்றொழில் பாதிப்பு

தற்போது நிலவும் கடுமையான வறட்சி காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் சிறுகடல் தொழிலில் ஈடுபட்டு வரும் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட கடற்றொழிலாளர்களின் தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது. வறட்சி காரணமாக விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ள அதே நேரம் சிறுகடல் பகுதிகளில் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களின் தொழில் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன்படி நந்திக்கடல், இரட்டை வாய்க்கால், புதுமாத்தளன் ஆறு, சாலைக்கடல், கொக்கிளாய் ஆறு ஆகியவற்றின் நீர்மட்டம் வற்றிக் காணப்படுவதால் குறித்த பகுதிகளில் கடற்றொழிலில் ஈடுபட்டு வந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக…

Read More