Headlines

10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை




நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

தீடீர் மழையை அடுத்தே எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நுவரெலியா, மாத்தளை, பதுளை, களுத்துறை, இரத்தினபுரி, மாத்தறை, மொனராகலை, காலி, கண்டி  மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கே குறித்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அப்பிரதேசத்தில் உள்ளவர்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்கும்படி அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *