Headlines

4-வது முறையாக அணுகுண்டு சோதனைக்கு தயார் ஆகிறது, வடகொரியா

உலக நாடுகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வடகொரியா அடுத்தடுத்து 3 முறை அணுகுண்டு சோதனை நடத்தியது. இதன் காரணமாக கொரிய தீபகற்ப பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில் அந்த நாடு, 4-வது முறையாக அணுகுண்டு சோதனை நடத்த தயார் ஆகி வருவதாக தெரிய வந்துள்ளது. வடகொரியாவில் உள்ள நயாங்பயான் அணு வளாகத்தை உளவாளிகள், தொழில்நுட்ப நுண்ணறிவு முறைகளை பயன்படுத்தி கண்காணித்து வந்ததில், இது தெரிய வந்துள்ளது. கடந்த மாதம், தனது அணு உலைகளை…

Read More

இலங்கை -யூத நட்புறவுச் சங்கம் உதயம்

இலங்கைக்கும் சர்வதேச யூத அமைப்புகளுக்குமிடையிலான நட்புறவுச் சங்கம் ஒன்று நேற்று உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கை வந்துள்ள அமெரிக்க யூத அமைப்புகளின் பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான முயற்சிகளை வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்சா டி சில்வா மேற்கொண்டிருந்தார். அமெரிக்க யூத அமைப்பின் பிரதிநிதிகள் இதுகுறித்து கருத்து வெளியிடும்போது இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி தொடர்பில் இரு தரப்பு ஒத்துழைப்புடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள தமது அமைப்பு முயற்சிகளை முன்னெடுக்கும் என்று தெரிவித்துள்ளனர். இலங்கை வந்துள்ள அமெரிக்க…

Read More

நேதாஜி தொடர்பான ஆவணங்களை வெளியிட உதவுவோம்: ரஷ்யா உறுதி

இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைத்து இந்திய நாட்டின் விடுதலைக்காக போராடிய நேதாஜி, கடந்த 1945ம் ஆண்டு தைவான் விமான விபத்தில் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டாலும், அவரது மரணம் குறித்த மர்மம் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. மேலும், நேரு பிரதமராக இருந்தபோது நேதாஜி குடும்பத்தினர் உளவு பார்க்கப்பட்டதாகவும் எழுந்துள்ள சர்ச்சைகளுக்கும் இன்று வரை விடை கிடைக்காமல் உள்ளது. நேதாஜி குறித்து மத்திய அரசு வசமுள்ள 130 ரகசிய ஆவணங்கள் வெளியிடப்பட்டால் இந்த மர்மங்களுக்கு விடை கிடைக்கும்…

Read More

சமயத் தலைவர்களின் உதவி அவசியமானது – மைத்திரி

சமாதானத்திற்கான சர்வதேச சமய மாநாட்டின் பிரதிநிதிகள் குழு இன்று (21) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தனர். சகல இனங்களுக்கிடையேயும் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதற்கு சகல சமயத் தலைவர்களினதும் உதவி அவசியமானது என ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.

Read More

அமெரிக்காவில் கடிகாரம் செய்து கைதான சிறுவன், குடும்பத்துடன் கத்தார் நாட்டில் குடியேறுகிறார்..!

அமெரிக்காவில் வடக்கு டெக்சாசில் அஹமது முகமத்  என்ற  14 வயது மாணவ சிறுவன் அங்குள்ள டாலஸ் பகுதி பள்ளியில் படித்து வந்தான். பள்ளியில் நடைபெற்ற பொறியியல் திட்டத்தின் ஒரு பகுதியில். தான் சுயமாக தயாரித்த டிஜிட்டல் கடிகாரத்தை பார்வைக்கு வைத்தார். அதைபார்த்த அறிவியல் பயிற்றுவிப்பாலர் பாராட்டினார். ஆனால் மற்றொரு  பள்ளி ஆசிரியை வெடிகுண்டு போன்று இருப்பதாக கூறி  பள்ளி நிர்வாகத்தில் புகார் செய்தார்.உடனடியாக பள்ளி நிர்வாகம் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்தது. காவல்துறையினர் பள்ளி சிறுவனை கைது செய்தனர்….

Read More

காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

புத்தள கோணகங்கார பகுதியில் 5 நாட்களுக்கு முன்பு காணாமல்போன சிறுவனின் சடலம்மாணிக்க கங்கையில் மிதந்து கொண்டிருந்த போது பொலிஸார் மீட்டுள்ளனர். சம்பவத்தில் 8 வயதுடைய சிறுவனின் சடலமே மீட்கப்பட்டுள்ளது. பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.’

Read More

கொண்டையாவுக்கு பிணை

கொட்டதெனியாவ சிறுமி சேயா செதவ்மியின் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கொண்டையா மீது தொடரப்பட்டிருந்த இரண்டு வழக்குகளில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொண்டையாவை இன்று கம்பஹா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பேதே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இவர் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

விஜயதாச ராஜபக்ஷவுக்கு நீதிமன்றம் அழைப்பாணை

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை எதிர்வரும் நவம்பர் மாதம் 12 ஆம் திகதி உயர்நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் சிலர் சட்டத்துக்கு அப்பால் சென்று சந்தேகநபர்களுக்கு தண்டனை வழங்குவதாக  கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலனை செய்யும் போதே உயர்நீதிமன்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்க விஜயதாச ராஜபக்ஷவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

காட்டு யானை தாக்குதலில் கொல்லப்பட்ட கர்ப்பிணிக்கு இரட்டை சிசுக்கள்

மட்டக்களப்பு தாந்தாமலை நெல்லிக்காடு பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலையில் காட்டு யானைத் தாக்குதலில் கொல்லப்பட்ட கர்ப்பிணித் தாயான தம்பிராசா சுயமலர் (வயது 17) என்பவரின் கர்ப்பத்தில் இரட்டை சிசுக்கள் இருந்தது, பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாக கொக்கட்டிச்சோலைப் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் அவரது கணவனும் காட்டு யானையால் அடித்துக் கொல்லப்பட்டிருந்தார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி விக்ரம ஆராச்சியின் அறிக்கையில் 17 வயதான இந்த இளம் கர்ப்பிணித் தாய்க்கு காட்டு யானைத் தாக்குதலால் தலையில்…

Read More

ஹெரோயினுடன் வெலே சுதாவின் சகோதரி உட்பட மூவர் கைது

ஹெரோயின் போதைப் பொருளுடன் வெலே சுதாவின் சகோதரி உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 111.54 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கொழும்பு பொரளை பிரதேசத்தில் மூன்று இடங்களில் நேற்று கைது செய்யப்பட்ட இவர்களிடம் பல்வேறு தரத்திலான ஹெரோயின் இருந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர். போதைப் பொருளை வைத்திருந்தமை, அதனை விற்பனை செய்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கிய வெலே சுதா என்பவருக்கு அண்மையில் மரண தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

எந்த அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள முடியும்: விளாடிமிர் புதின்

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான அரசை பதவியில் இருந்து இறக்கும் நோக்கத்தில் அவரது அதிருப்தியாளர்கள் தொடங்கிய போராட்டம், உள்நாட்டுப் போராக உருவெடுத்தது. 4 ஆண்டுகளாக இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. சிரியாவில் ஐ.எஸ்.களை ஒழித்துக்கட்டும் நோக்கத்தில் அமெரிக்க கூட்டுப் படைகள் சிரியாவில் விமானப்படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. சிரிய அதிபர் அசாத்தின் படைகளுக்கு ஆதரவாக ரஷ்யா களத்தில் இறங்கி கடும் வான்வழி தாக்குதலை நடத்திவருகிறது.  ரஷ்யாவின் இந்த நடவடிக்கை அமெரிக்காவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்…

Read More

லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நீதியரசர் டி.பி வீரசூரிய நியமனம்!

லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நீதியரசர் டி.பி வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் ஆணைக்குழுவின் மற்றும் சில பதவிகளுக்கு நீதியரசர் ரஞ்சித் சில்வா மற்றும் நெவில் குருகே ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுச் சேவை ஆணைக்குழுவின் ஆணையாளராக டி.திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஏ.டபிள்யூ.ஏ.சலாம் , எம்.எஸ். செனவிரத்ன. தாரா விஜேதிலக்க , பிரதாப் இராமானுஜன், விஜயலக்ஷ்மி ஜெகராஜசிங்கம் , எம்.எல்.எம். மெண்டிஸ், ஆர்.ரனுக்கே மற்றும் சரத் ஜயதிலக்க ஆகிரோர் ஆணைக்குழுவின் மற்றைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் இதனைத் தெரிவித்துள்ளார்.

Read More