Headlines

ஐ.நாவின் அறிக்கைக்கு நாடாளுமன்ற விவாதம் கோருகிறார் வீரவன்ச




சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கிளை ஒன்றை இலங்கையில் நியமிக்குமாறு ஜெனிவா மனித உரிமைகள் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறித்து நாடாளுமன்ற விவாதம் ஒன்று கோரப்படவுள்ளதாக விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சபாநாயகருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி இருப்பதாக அவர் கூறியுள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கிளை ஒன்றை இலங்கையில் நிறுவுவதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அதேநேரம் சீபா உடன்படிக்கை தொடர்பாக தொடர்ந்தும் நாம் எதிர்ப்புகளை வெளியிட விரும்புகின்றோம்.

எவ்வாறாயினும், சீபா உடன்படிக்கை தொடர்பான எந்த முன்னெடுப்புகளும் இடம்பெறவில்லை என்று, ஜனாதிபதியும் பிரதமரும் நேற்றுமுன்தினம் ஊடகப் பிரதானிகளிடம்தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *