Headlines

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இறுதி தேர்தல் பிரசாரக் கூட்டம்




–  அப்துல் அஸீஸ் –

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனை தொகுதிக்கான இறுதி தேர்தல் பிரசாரக் கூட்டம், இன்று வியாழக்கிழமை மாலை 5.00மணிக்கு கல்முனை கடற்கரை வீதியில் இடம்பெறவுள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பாக திகாமடுல்ல மாவட்டத்தில் 7ஆம் இலக்க வேட்பாளராக போட்டியிடும் எம்.எ.கலீல்லூர் ரஹுமானின் ஒருங்கிணைப்பில் இடம்பெறவுள்ள இப்பிரச்சாரக்கூட்டத்தில், கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், பிரதி அமைச்சர் எம்.எஸ்.அமீர் அலி , கட்சியின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி வை.எல்.எஸ் ஹமீட் ஆகியோர் உட்பட கட்சியின் உயர்பீட உறுப்பினர்களும், போட்டியிடும் வேட்பாளர்களும் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *