‘மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் மீதான கெடுபிடிகள் எல்லை தாண்டி செல்கின்றன’ – வஃபா பாறுக்!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் மீதான கெடுபிடிகள் எல்லை தாண்டி செல்கின்றன. தேர்தல் ஆணையகத்தின் பரிந்துரையை குப்பை தொட்டிக்குள் வீசிவிட்டு, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை பழி வாங்குவதிலேயே அதிகார வெறியர்கள் கரிசனை காட்டுகின்றார்கள். சிறையில் அடைப்பதால் ஏற்படவிருக்கும் லாப நட்ட கணக்கில் தெளிவின்மையால், இன்னும் கைது செய்யாமல் விசாரனை என்ற பெயரில் பாரிய உளவியல் தொல்லைக்குள்ளாக்குகின்றார்கள். ரிஷாட் பதியுதீனை கைது செய்வதால், சில ஆயிரம் இனவாத வாக்குகளை அதிகரித்துக்கொள்ளலாம் என நிச்சயமானால், அவரை…
