பொத்துவில் ஆமவட்டுவான் பகுதியில் காணிகளை எல்லையிடுதல் பிரச்சினைக்கு முஷாரப் எம்.பி யின் தலையீட்டில் தீர்வு!
பொத்துவில் ஆமவட்டுவான் பகுதியில் 06.11.2020 அன்று வன இலாகா அதிகாரிகளினால் எல்லைக்கற்கள் நடப்பட்டவேளை, அங்கு தவறான முறையில் எல்லைகள் இடப்படுகின்றன எனும் மக்களின் முறைப்பாட்டை தொடர்ந்து, குறித்த இடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் விரைந்தார். அந்த நேரத்தில் குறித்த பகுதியில் எல்லையிடும் அதிகாரிகள் லாகுகல மற்றும் பொத்துவிலின் எல்லைப்படுத்தலுக்கான 2006 ஆம் ஆண்டின் அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி எல்லைகளை அமைக்காமல், அதற்கு முரணான வகையில் எல்லைகளை அமைத்துக்கொண்டிருந்துடன், எந்தப் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பிரிவில் எல்லைகளை அமைக்கின்றார்கள்…
