Headlines

“கொரோனா உயிரிழப்பு வலியை விடவும், உடல்களை எரிப்பதே முஸ்லிம் சமூகத்துக்கு பெரும் வலியாக உள்ளது” – முஷாரப் எம்.பி!

இனவாதிகள் என்பவர்கள் அரசியல்வாதிகளாக மட்டும் இருக்க வேண்டுமென்பதில்லை. அதிகாரிகளாகவும் இருக்கலாம் என்பதற்கு விசேட வைத்தியர் குழுவின் சில உறுப்பினர்கள் உதாரணமாகவுள்ளனர். அத்துடன் ஜனாஸா நல்லடக்கம் தொடர்பில் நியமிக்கப்ட்டுள்ள நிபுணர்குழு உலக சுகாதார ஸ்தாபனத்திலுள்ள நிபுணர்களை விடவும் சிறந்த நிபுணர்களா கேட்கிறேன் என அகிலஇலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம். முஷாரப் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (30) திங்கட்கிழமை இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுகாதார அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு…

Read More

கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசமான கொழும்பு வடக்கின் ரந்திய உயன, மெத்சந்த செவன மற்றும் மிஜய செவன தொடர்மாடிக் குடியிருப்புக்களில் வசிக்கும் குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகளை மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் பாயிஸ் இன்று (29) வழங்கி வைத்தார். அத்துடன், எதிர்வரும் நாட்களில் “பாயிஸ் பவுன்டேஷன்” ஏற்பாட்டில், கொழும்பு வடக்கில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஏனைய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் உலர் உணவுப் பொதிகள் விநியோகிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் 2018 ஆம் ஆண்டு பண்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து, அறபா முஸ்லிம் வித்தியாலய மாணவர்களுக்கான கற்றல் உபகரணப் பொருட்கள் இன்று (26) வழங்கி வைக்கப்பட்டது. கட்சியின் உயர்பீட உறுப்பினர் முத்து முஹம்மத் மற்றும் நகரசபை உறுப்பினர் பாரி ஆகியோரினால் குறித்த கற்றல் உபகாரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

முசலி பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் – 2021 எதிர்ப்பின்றி நிறைவேறியது!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆளுகைக்குட்பட்ட முசலி பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்ப்பின்றி, ஏகமனதாக நிறைவேறியது. முசலி பிரதேச சபை தவிசாளர் சுபியான் தலைமையில், இன்று காலை (19) இடம்பெற்ற கூட்டத்தின் பின்னரான வாக்கெடுப்பின் போது, 15 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். 16 உறுப்பினர்களைக் கொண்ட இந்த சபையில், பொதுஜன பெரமுன காட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் வாக்கெடுப்பில் நடுநிலை வகித்தார். முசலி பிரதேச சபையில் அகில இலங்கை மக்கள்…

Read More

பொத்துவில் ஆமவட்டுவான் பகுதியில் காணிகளை எல்லையிடுதல் பிரச்சினைக்கு முஷாரப் எம்.பி யின் தலையீட்டில் தீர்வு!

பொத்துவில் ஆமவட்டுவான் பகுதியில் 06.11.2020 அன்று வன இலாகா அதிகாரிகளினால் எல்லைக்கற்கள் நடப்பட்டவேளை, அங்கு தவறான முறையில் எல்லைகள் இடப்படுகின்றன எனும் மக்களின் முறைப்பாட்டை தொடர்ந்து, குறித்த இடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் விரைந்தார். அந்த நேரத்தில் குறித்த பகுதியில் எல்லையிடும் அதிகாரிகள் லாகுகல மற்றும் பொத்துவிலின் எல்லைப்படுத்தலுக்கான 2006 ஆம் ஆண்டின் அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி எல்லைகளை அமைக்காமல், அதற்கு முரணான வகையில் எல்லைகளை அமைத்துக்கொண்டிருந்துடன், எந்தப் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பிரிவில் எல்லைகளை அமைக்கின்றார்கள்…

Read More

சம்மாந்துறை விவசாயிகள் பாதிப்பு; சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முஷாரப் எம்.பி முஷ்தீபு!

சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட வளத்தாப்பிட்டி, கரங்கா வட்டையில் முஸ்லிம்கள் பூர்வீகமாக வேளாண்மை செய்து வருகின்றனர். உரிய சட்டப்பூர்வ ஆவணங்களும் அவர்களிடம் உள்ளன. இந்நிலையில், அவர்களது காணிகளுக்குள் அத்துமீறும் ஒரு சில பெரும்பான்மையினர், அவ்விவசாயிகளை அச்சுறுத்தி வருவதுடன், செய்கை பண்ணவிடாது பல இடைஞ்சல்களையும் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பாதிப்படையும் விவசாயிகள், தமது பொருளாதாரத்தையும் இழந்து வருகின்றனர். குறித்த வயல் காணிகளில் முஸ்லிம் விவசாயிகள் மகாபோக வேளாண்மை செய்கை செய்துள்ளனர். கடந்த 07 ஆம் திகதி அக்காணிகளுக்குள் அத்துமீறிய பெரும்பான்மை…

Read More

සසුන එළිය කළ සංඝපීතෘන් වහන්සේ…

සසුන එළිය කළ සංඝපීතෘන් වහන්සේ… අපවත්වී වදාළ උතුරු පළාත් ප්‍රධාන සංඝනායක, මුලතිව් දිස්ත්‍රික් බල මණ්ඩල සභාපති, වැලිඔය, කිරිඉබ්බන්වැව ධර්මප්‍රනීතාරාම විහාරාධිපති, පොළොන්නරුවේ තිලකාලංකාර නායක ස්වාමීන්වහන්සේටනිවන් සුව ලැබේවා…! සමස්ත ලංකා මහජන කොංග්‍රසයේ සාතිශය සංවේගය. වන්නි දිස්ත්‍රික් පාර්ලිමේන්තු මන්ත්‍රී රිෂාඩ් බදියුදීන්.

Read More

“முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்குவதற்கு ஜனாதிபதி தனது அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும்” – பாராளுமன்றில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன்!

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்துக்கு அமைய, ஜனாதிபதிக்குக் கிடைத்துள்ள அதிகாரத்தின் துணிவிலாவது, கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி இறந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார். இன்று (03) பாராளுமன்றில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, எந்தவொரு குற்றமும் செய்யாமல் சிறையில் அடைக்கப்பட்டு, அங்கிருந்து வந்து பேசிக் கொண்டிருக்கின்றேன். வட மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கு வாக்களிக்க வசதி செய்து கொடுத்த காரணத்தை வைத்தே, என்னை…

Read More