சம்மாந்துறை விவசாயிகள் பாதிப்பு; சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முஷாரப் எம்.பி முஷ்தீபு!
சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட வளத்தாப்பிட்டி, கரங்கா வட்டையில் முஸ்லிம்கள் பூர்வீகமாக வேளாண்மை செய்து வருகின்றனர். உரிய சட்டப்பூர்வ ஆவணங்களும் அவர்களிடம் உள்ளன. இந்நிலையில், அவர்களது காணிகளுக்குள் அத்துமீறும் ஒரு சில பெரும்பான்மையினர், அவ்விவசாயிகளை அச்சுறுத்தி வருவதுடன், செய்கை பண்ணவிடாது பல இடைஞ்சல்களையும் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பாதிப்படையும் விவசாயிகள், தமது பொருளாதாரத்தையும் இழந்து வருகின்றனர். குறித்த வயல் காணிகளில் முஸ்லிம் விவசாயிகள் மகாபோக வேளாண்மை செய்கை செய்துள்ளனர். கடந்த 07 ஆம் திகதி அக்காணிகளுக்குள் அத்துமீறிய பெரும்பான்மை…
