Headlines

மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர்களுடனான சந்திப்பு!

மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான அப்துல்லாஹ் மஹ்ரூப், திருமலை மாவட்ட பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் அசங்க ஆகியோரை இன்று காலை (23)  சந்தித்துக் கலந்துரையாடினார்.  நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக, அன்றாட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த அவர், வருமானம் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட உணவுத் தேவைக்காக உலர் உணவு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளை…

Read More

ஓட்டமாவடியில் கொரோணா பீதி: வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை – தவிசாளர் அஸ்மி!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடியில், நேற்று (22) ஞாயிற்றுக்கிழமை ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளானார் என்று வெளிவந்துள்ள செய்தியில், எவ்வித உண்மையும் இல்லை என்று, கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஓட்டமாவடி வர்த்தக நிலைய கடைத்தொகுதி ஒன்றில், வெளிப்பிரதேசத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டு, அவரை பொதுச் சுகாதார பரிசோதகர்களின் உதவியுடன் பொலிசாரினால் வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டு, அவர் வைத்திய பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டார்….

Read More