Headlines

மயில் சின்னத்தில் அம்பாரையில் தனித்து களமிறங்கும் மக்கள் காங்கிரஸ்!

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், அம்பாரை மாவட்டத்தில், மயில் சின்னத்தில் தனித்துக் களமிறங்குகின்றது. அம்பாரை மாவட்டத்தில், மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் பொருட்டு, சட்ட முதுமாணி வை.எல்.எஸ். ஹமீட் மற்றும் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் கே.எம். ஜவாத் (அப்துல் ரஸாக்) ஆகியோர், இன்று (19) அதிகாலை வேட்புமனுவில் கையெழுத்திட்டனர். வை.எல்.எஸ்.ஹமீட் தலைமையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடும் ஏனைய வேட்பாளர்கள், ஏற்கனவே வேட்புமனுவில் கையெழுத்திட்டுள்ளனர். அந்தவகையில், சட்ட முதுமாணி வை.எல்.எஸ்….

Read More

வேட்புமனுவை கையளித்தார் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!!!

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டமைப்பில், வன்னியில் போட்டியிடவுள்ள, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அப்துல் ரிஷாட் பதியுதீன், வவுனியா தெரிவத்தாட்சி அலுவலகத்தில் இன்று (19) வேட்புமனுவைக் கையளித்தார். சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டமைப்பில் (சமகி ஜன பலவேகய), தொலைபேசி சின்னத்தில், வன்னி மாவட்டத்தின் முதன்மை வேட்பாளராக அவர் போட்டியிடவுள்ளார்.

Read More

மக்கள் காங்கிரஸ் அம்பாரையில் தனித்தும் 06 மாவட்டங்களில் இணைந்தும் களத்தில்!

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாரையில் தனித்தும், ஏனைய 06 மாவட்டங்களில் இணைந்தும் களமிறங்குகின்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாரை மாவட்டத்தில் கட்சியின் மயில் சின்னத்தில் தனித்துக் களமிறங்குவதுடன், வன்னி, மட்டக்களப்பு, திருகோணமலை, குருநாகல், அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்திலும், புத்தளம் மாவட்டத்தில் பொதுக் கூட்டமைப்பின் கீழ், தராசு சின்னத்திலும் ஒட்டுமொத்தமாக 07 மாவட்டங்களில் போட்டியிடுகின்றது. வன்னி மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள்…

Read More