Headlines

ஆலங்குடா, மசூர் நகர் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு!

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆப்தீன் எஹியா தலைமையில், புத்தளம், ஆலங்குடா, மசூர் நகர் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பொன்று நேற்று (12) இடம்பெற்றது. இச் சந்திப்பில் பிரதேச சபை உறுப்பினர் அக்மல் மற்றும் மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி பிரதேச முக்கியஸ்தர் தௌபீக் உட்பட ஊர் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர். இதேவேளை, ஆண்டான்கனி பகுதிக்கும் நேற்று விஜயம் செய்த  முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆப்தீன் எஹியா, அங்குள்ள முக்கியஸ்தர்களையும் சந்தித்து, பொதுத்தேர்தல் தொடர்பில் கலந்துரையாடினார்.

Read More

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், சவரான பாடசாலை அபிவிருத்திப் பணிகள் திறந்து வைப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், சிலாபம், சவரான முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கரப்பந்தாட்ட மைதானம், பெவிலியன் மற்றும் நுழைவாயில் ஆகியவற்றை, மாணவர்களின் பாவனைக்காகத் திறந்துவைக்கும் நிகழ்வு நேற்று (12) இடம்பெற்றது. புத்தளம் நகரசபை உறுப்பினரும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தருமான அலி சப்ரி ரஹீமின் முயற்சியில், சவரான கட்சிக் கிளையின் வேண்டுகோளின் பேரில், சுமார் 60 இலட்சம் ரூபா பெறுமதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த  அபிவிருத்திப் பணிகளை திறந்துவைக்கும்  நிகழ்வில்,…

Read More

அமெரிக்க தூதுவராலயத்தின் அரசியல் பொறுப்பாளர் – மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு!

அமெரிக்க தூதுவராலயத்தின் அரசியல் பொறுப்பாளர் ஜொன்னா (Joanna H Pritchett) மற்றும் நஸ்ரின் மரைக்கார் (Nazreen Maraikkar) தலைமையிலான குழுவினர், அம்பாறை மாவட்ட மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினர். முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜவாத்தின் இல்லத்தில் நேற்று (12) இடம்பெற்ற இந்த சந்திப்பில், மக்கள் காங்கிரஸின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர் சட்டத்தரணி முஷாரப்பும் பங்கேற்றிருந்தார். இதன்போது, அம்பாறை மாவட்டத்தின் தற்போதைய அரசியல் களநிலவரங்கள் தொடர்பில், விரிவாகக் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

புலமைப்பரிசில் பரீட்சையில் சிந்தியைடந்த மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு!

“அமீர் அலி பவுண்டேஷனின்” ஏற்பாட்டில் 2019ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சிந்தியைடந்த மாணவர்கள், கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை கெளரவிக்கும் நிகழ்வும், பொது தொடர்பாடல் சேவையில் சேவையாற்றிய கலீல் அவர்களுக்கு சிஹாப்தீன் மெளலவி விருது வழங்கும் நிகழ்வும் மீராவோடை, அல் ஹிதாயா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது. பிரதித் தலைவர் வைத்தியர் அப்தாப் அலி தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், மக்கள் காங்கிரஸ் தவிசாளர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், பிரதேச சபை…

Read More