Headlines

மட்டக்களப்பு கெம்பஸில் அமைக்கப்பட்டுள்ள கொரோணா வைரஸ் தடுப்பு முகாமுக்கு எதிராக, நிந்தவூர் பிரதேச சபை கண்டனத் தீர்மானம்!

COVID-19 (கொரோணா) வைரஸால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகளை பரிசோதிக்கும் நிலையமாக கிழக்கு மாகாணத்தின், மட்டக்களப்பு மாவட்ட, புணானை, மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தையும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையையும் பயன்படுத்துவதற்கு, அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு எதிராக, நிந்தவூர் பிரதேச சபையில் ஏகமனதாக கண்டன பிரேரணை நிறைவேற்றப்பட்டது. நிந்தவூர் பிரதேச சபையின் மாதாந்த சபை கூட்டமும், 2020 / பிரதேச சபையின் 24 வது சபை அமர்வும்  இன்று காலை  (12) 10.20 மணியளவில், நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர்…

Read More

மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

புத்தளம் நகரசபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தருமான அலி சப்ரி ரஹீமினால், பாடசாலை மாணவர்கள் பத்தாயிரம் பேருக்கு கற்றல் உபகரணங்கள்  வழங்கி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேலதிக தேவை உடையோர் 3000 பேரை இனங்கண்டு, புத்தளம் மாவட்டத்தின் புளிச்சாக்குளம் மற்றும் கனமூலை பிரதேச மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.  புளிச்சாக்குளம், உமர் பாரூக் பாடசாலை அதிபரின் வேண்டுகோளின் பெயரில், பிரதேச சபை உறுப்பினர் நிஜாமுதீனின் சிபாரிசில் 200 மாணவர்களுக்கும், கனமுலை பிரதேசத்தைச் சேர்ந்த…

Read More

பொத்துவில் ஐ.தே.க முக்கியஸ்தர்கள் மக்கள் காங்கிரஸில் இணைவு!

பொத்துவில் பிரதேச ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் சிலர், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்துகொண்டனர். பொத்துவில் ஐ.தே.க அமைப்பாளர் யு.எல்.எம். நியாஸ் தலைமையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – 2018 இல் போட்டியிட்ட ராபி, முகைதீன் பாவா, தாஜூதீன், கோமாரி ஐ.தே.க அமைப்பாளரும், வேட்பாளருமான ராஜீ, அரபா சமூக சேவை அமைப்பின் தலைவர் தஸ்லீம் மற்றும் அஸ்மி, தொர ஆகியோர், கட்சித் தலைவர் ரிஷாட் பதியுதீன் முன்னிலையில்…

Read More

தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் பிரத்தியேக வகுப்பு நிலைய ஒழுங்கமைப்பு தொடர்பான கலந்துரையாடல்!

நிந்தவூர் பிரதேசத்தில் காணப்படும் தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் பிரத்தியேக வகுப்பு நிலையங்களை ஒழுங்கமைப்புக்குள் கொண்டுவரும் நோக்குடனான சந்திப்பொன்று அண்மையில், நிந்தவூர் பிரதேச சபையில், தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தலைமையில் நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது, தனியார் மற்றும் பிரத்தியேக கல்வி நிறுவனங்களில் காணப்பட வேண்டிய சுற்றுச்சூழல், பெளதீக கட்டமைப்பு, நேர அட்டவணை மற்றும் மாணவ மாணவிகளின் ஒழுக்க செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக, விரிவாக கலந்தாலோசனை செய்யப்பட்டன. இதன்போது, ஏற்கனவே பிரதேச சபையால் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு…

Read More

பாராளுமன்ற பொதுத் தேர்தல் – 2020 – வேட்பாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்…!

பாராளுமன்றப் பொதுத் தேர்தல் – 2020 வேட்பாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்…! அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) எதிர்வரும் 2020 – ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில், எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி, “ஐக்கிய மக்கள் சக்தி” கூட்டமைப்புடன் கூட்டுச்சேர்ந்து, நாடுதழுவிய ரீதியில் வேட்பாளர்களை நியமிக்கவுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட எதிர்பார்க்கும் ஆர்வமுள்ள வேட்பாளர்கள், தாங்கள் போட்டியிட விரும்பும் மாவட்டத்தைக் குறிப்பிட்டு, தங்களது பூரண…

Read More

முஸ்லிம் காங்கிரஸும் மக்கள் காங்கிரஸும் இணைந்து, புத்தளத்தில் பொதுச்சின்னத்தில் களமிறங்க முடிவு!

புத்தளம் மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து, பொதுச்சின்னத்தில் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று இரவு (11) மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான குழுவுக்கும், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர், இந்த முடிவு எடுக்கப்பட்டது. புத்தளத்தில் நீண்டகாலமாக பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாத குறை தொடர்பில், அங்குள்ள பள்ளிவாசல் சம்மேளனம், பொதுநல அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இந்த…

Read More