Headlines

ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்ற சரண்யாவிற்கு முன்னாள் அமைச்சர் ரிஷாட் வாழ்த்து!

1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட சசிகுமார் சரண்யாவிற்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் இன்று (08) தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். தேசிய இளைஞர் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 31வது தேசிய விளையாட்டு நிகழ்வில், 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், பெண்கள் பிரிவில் முதலிடத்தைப் பெற்ற முல்லைத்தீவு, துணுக்காயைச் சேர்ந்த சசிகுமார் சரண்யாவுக்கு, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதுடன், பரிசுகளையும் வழங்கி வைத்தார்.

Read More

அபிவிருத்தி செய்யப்பட்ட கதிரானவத்தை பிரதேச வீதி மக்கள் பாவனைக்கு கையளிப்பு!

கொழும்பு – 15, மட்டக்குளி, கதிரானவத்தை பிரதேச மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்  ரபீக்கின் வேண்டுகோளுக்கிணங்க, புதிதாக அபிவிருத்தி செய்யப்பட்ட கதிரானவத்தை பிரதேச வீதியை மக்கள் பாவனைக்காகக் கையளிக்கும் நிகழ்வு, முன்னாள் எம்.பி முஜிபுர் ரஹ்மானின் பங்கேற்பில் இடம்பெற்றது. இன்று காலை (08) இடம்பெற்ற இந்த நிகழ்வில், மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளரும் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினருமான பாயிஸ் மற்றும் கட்சியின் உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.  

Read More

நாகவில்லு பிரதேச முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல்!

புத்தளம் பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் ரிஜாஜின் ஏற்பாட்டில், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆப்தீன் எஹியாவின் தலைமையில், நாகவில்லு பிரதேச மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல் நேற்று (07) இடம்பெற்றது. எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் ஆராயப்பட்ட இந்தக் கலந்துரையாடலில், புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ரிபாஸ், கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்களான ஆஷிக், பைசர் மரிக்கார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Read More

கிண்ணியா, மூதூர் மு.கா உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மக்கள் காங்கிரஸில் இணைவு!

கிண்ணியா நகரசபையின் பிரதித் தவிசாளர் ஐ.சப்ரீன் (ஐயூப் நளீம்), மூதூர் பிரதேச சபையின் உறுப்பினர் தானீஸ் ஆகியோர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் முன்னிலையில், இன்று (08) கட்சியில் உத்தியோகபூர்வமாக இணைந்துகொண்டனர். கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நகரசபை, பிரதேசபை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள்  உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Read More