முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம்!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், புத்தளம், மதவாக்குளம் பிரதேசத்தில் கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீமின் முயற்சியினால், மக்கள் காங்கிரஸின் மதவாக்குள கட்சிக் குழுவின் வேண்டுகோளுக்கிணங்க, சுமார் 16 இலட்சம் ரூபா பெறுமதியில் அமைக்கப்பட்ட இந்தக் கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம், நேற்று (04) அலி சப்ரி ரஹீமினால் திறந்து வைக்கப்பட்டது. மதவாக்குள பிரதேசத்தின் மிக நீண்டகால தேவைப்பாடாக…
