மஹர சிறைச்சாலை புத்தர்சிலை விவகாரம்! உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி, பிரதமரிடம் ரிஷாட் எம்.பி கோரிக்கை!!!
மஹர சிறைச்சாலையில் 100 வருடம் பழைமைவாய்ந்த பள்ளிவாசலுக்குள் புத்தர் சிலையை நிறுவி, அதனை ஓய்வு அறையாக மாற்றி, முஸ்லிம் சமூகத்தின் மத உணர்வுகளை காயப்படுத்திய இழிசெயலை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் எம்.பி தெரிவித்துள்ளார். இந்த தீய செயலுக்குப் பின்னால் உள்ள சக்திகளுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரை கேட்டுள்ள அவர், இந்தச் செயலானது அரசியலமைப்பில் மதங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளையும், அடிப்படை உரிமைகளையும் நிராகரிக்கின்றதெனவும்…
