Headlines

உதுமான் வித்தியாலயத்தின் 1வது வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி

மீராவோடை உதுமான் வித்தியாலயத்தின் 1வது வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி 26.02.2020 புதன்கிழமை அதிபர் முபாரக் தலைமையில் மீராவோடை அல் ஹிதாயா பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்வுக்கு பிரதிக் கல்விப் பணிப்பாளர்அஜ்மீர், பிரதேச சபை உறுப்பினர் நெளபர், கோட்டக் கல்விப் பணிப்பாளர் அஹ்சாப், முன்னாள் தவிசாளர் ஹமீட், உதவி கல்விப் பணிப்பாளர் , ஜாபீர் கரீம், ஆசிரியர் ஆலோசகர் சித்தீக், அதிபர்கள்,…

Read More

விசேட தேவையுடைய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

கமு/கமு/அல்-அதான் வித்தியாலயத்தில் நேற்று (28) விசேட தேவையுடைய மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் நிந்தவூர் பிரதே சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.   கடந்த சுதந்திர தின விழாவை முன்னிட்டு நிந்தவூர் பிரதேச சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்ட கல்வி அபிவிருத்தித் திட்டத்தின் ஒரு அங்கமாகவே இந் நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

எதிர்வரும் தேர்தல் எமது சிறுபான்மை சமூகத்தின் உரிமையை பாதுகாக்கும் தேர்தலாகும்_அப்துல்லா மஃறூப் எம்.பி

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் அபிவிருத்திக்கான தேர்தல் அல்ல அது எமது சிறுபான்மை சமூகத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான தேர்தலாகும் எனவும் இதனை பாதுகாக்க நாம் சரியான தலைமகளை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார். தம்பலகாமம் அல் ஹிக்மா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நேற்று (27) மாலை இடம் பெற்ற இல்ல விளையாட்டு போட்டியில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்துரைக்கையில்…

Read More

“பன்முக ஆளுமையின் மறைவு கவலை தருகிறது” ரிஷாட் பதியுதீன் எம்.பி!!!

பன்முக ஆளுமை கொண்ட புத்தளத்தின் பொக்கிஷம்  அல்-ஹாஜ் அப்துல் லதீப் ஆசிரியரின் மறைவு கவலை தருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “அன்னார் சிறந்த மனித நேயம் கொண்டவராகவும் சமூகத்தின் நன்மதிப்பை பெற்றவராகவும் விளங்கினார். நல்லாசிரியராக, பன்னூலாசிரியராக, சிறந்த ஊடகவியலாளராக, கவிஞராக இன்னும் பல்வேறு துறைகளிலும் தடம்பதித்திருந்த அன்னாரின் மறைவு புத்தளம் மண்ணுக்கு பேரிழப்பாகும். இவர் சமூகத்திற்காக பல நூல்களை…

Read More

நிந்தவூர் கடற்கரைப் பிரதேசங்களில் ஆசனவசதி! 75 இலட்சம் நிதி ஒதுக்கீடு

நிந்தவூர் கடற்கரைப் பிரதேசத்திற்கு பொழுதுபோக்கிற்காக வருகை தரும் பொதுமக்களைக் கவரும் வண்ணமும் அத்தகைய பொது மக்கள் மற்றும் மீனவ சமூகத்தினருக்கும் வசதிகளை ஏற்படுத்தும் வகையிலான செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அண்மைக்காலமாக நிந்தவூர் கடற்கரைப் பகுதிக்கு பொழுது போக்கிற்காக வருகைதரும் பொது மக்களின் தொகை அதிகரித்துவருவதுடன், குறிப்பாக அயல் பிரதேசங்களைச் சேர்ந்தோர் குடும்பம், குடும்பமாகப் பெருமளவில் மாலை நேரங்களில் வருகை தரவும் தொடங்கியுள்ளனர். இதனையடுத்து நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தனது எண்ணக்கருவிற்கு அமைய வருகைதரும் பொது மக்களுக்கு…

Read More

பூம் பூம்” விளையாட்டு கழகத்திற்கான விளையாட்டு சீருடை வழங்கும் நிகழ்வு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி பிராந்திய அமைப்பாளரும், முன்னால் மாகாண சபை உறுப்பினருமான ஆப்தீன் எஹியா அவர்களின் தனிப்பட்ட நிதியிலிருந்து, “எஹியா பௌண்டேசன்”  ஊடாக கடையாமோட்டை “பூம் பூம்” விளையாட்டு கழகத்திற்கான விளையாட்டு சீருடை  (25) உத்தியோக பூர்வமாக கழகத்தினருக்கு வழங்கி வைக்கப்பட்டது

Read More

ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் பதுர்தீன் கல்குடாவுக்கு துரோகம் இழைக்க மாட்டார் – அமீர் அலி எம்.பி புகழாரம்.

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஐ.எல். பதுர்தீன் கல்குடாவுக்கு துரோகம் இழைக்க மாட்டார் என்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.ஓட்டமாவடி – மீராவோடை அமீர் அலி வித்தியாலயத்தின் 3வது வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டியின் இறுதிநாள் நிகழ்வு பாடசாலை முன்றலில் செவ்வாய்க்கிழமை (25) பாடசாலையின் அதிபர் எம்.மஹ்ரூப் தலைமையில் நடைபெற்றது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் தொடர்ந்தும் பேசுகையில்,பிரதேச சபை உறுப்பினர் பதுர்தீன்…

Read More

மஹர சிறைச்சாலை புத்தர்சிலை விவகாரம்! உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி, பிரதமரிடம் ரிஷாட் எம்.பி கோரிக்கை!!!

மஹர சிறைச்சாலையில் 100 வருடம் பழைமைவாய்ந்த பள்ளிவாசலுக்குள் புத்தர் சிலையை நிறுவி, அதனை ஓய்வு அறையாக மாற்றி, முஸ்லிம் சமூகத்தின் மத உணர்வுகளை காயப்படுத்திய இழிசெயலை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் எம்.பி தெரிவித்துள்ளார். இந்த தீய செயலுக்குப் பின்னால் உள்ள சக்திகளுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரை கேட்டுள்ள அவர், இந்தச் செயலானது அரசியலமைப்பில் மதங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளையும், அடிப்படை உரிமைகளையும் நிராகரிக்கின்றதெனவும்…

Read More

கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு

தேவையுடைய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கும் நிகழ்வு (19)  நல்லாந்தலுவை  பாடசாலை அதிபர்  நஜீம்  தலைமையில் இடம்பெற்றது. முன்னால் மாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கல்பிட்டி பிராந்திய அமைப்பாளருமான ஆப்தீன் எஹியா அவர்களின் முயற்சியில், மேர்ஸி லங்கா நிறுவனத்தின் நிதியில் நல்லாந்தலுவை ஆரம்ப பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களில் தேவையுடைய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

Read More

சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த கட்சிகள் ஒன்றினைந்து பொதுத் தேர்தலின் பின் பலமிக்க நாடாளுமன்றத்தை அமைப்பார்கள்

எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலின் பின் சிறுபான்மை சமூகத்தை உள்ளடக்கிய கட்சிகள் ஒன்றினைந்து பலமிக்க நாடாளுமன்றத்தை சஜீத் பிரேமதாசவின் தலைமையில் உருவாக்குவார்கள் என்ற நம்பிக்கை இப்போது எமக்கு ஏற்பட்டிருக்கிறது என தம்பலகாம பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் எச்.தாலிப் அலி ஹாஜியார் தெரிவித்தார். தம்பலகாமத்தில்  (23) இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் தொடரந்தும் அங்கு உரையாற்றுகையில் மக்களே அதிகாரங்களை தெரிவு செய்கிறார்கள் மக்களுடைய…

Read More

உடற்கல்வி ஆசியர்களுக்கான சீருடை வழங்கும் நிகழ்வு

கோறளைப் பற்று மேற்கு கோட்டக் கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட உடற்கல்வி ஆசியர்களுக்கான சீருடை வழங்கும் நிகழ்வு முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி இல்லத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கோட்ட கல்விப் பணிப்பாளர் அஹ்சாப், உடற்கல்வி ஆசிரியர்களான நஸீர்,பிர்னாஸ் விளையாட்டு பயிற்சியாளர்களான சிபான், ஹாபிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Read More

வவுனியா குருமன்காடு மாவட்ட கிளைக்காரியாலயஅங்குரார்ப்பண நிகழ்வு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வவுனியா குருமன்காடு சந்தியில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட கிளைக்காரியாலயத்தை கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்

Read More