Headlines

தேர்தலில் முஸ்லிம் எம்.பி.க்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது – அமீர் அலி!

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை பத்தாகக் குறைப்பதற்கான வேலைத்திட்டங்கள், பேரினவாத சக்திகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஓட்டமாவடியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்தச் சதி குறித்து,  நாம் தெளிவாக இருந்துகொள்ள வேண்டும். தற்போதைய நிலவரத்தின் படி, பொருட்களுக்கான விலைவாசி மற்றும் வாழ்வாதார சிக்கல்கள் காரணமாக,…

Read More

“முஸ்லிம்களின் அரசியல் பலத்தை ஒடுக்க சதி”-தவிசாளர் தாஹிர் விசனம்

“முஸ்லிம்களின் அரசியல் பலத்தை ஒடுக்கி, அரசியல் அனாதைகளாக்கவும் முஸ்லிம்களின் பொருளாதாரத்தை நசுக்கவும் இன்று நாட்டில் திட்டமிட்ட சதிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனை அடியொற்றியே முஸ்லிம் அரசியல் தலைமைகள் மீது வெற்றுக் குற்றாச்சாட்டுக்களும் பழி சுமத்தல்களும் சுமத்தப்பட்டு நெருக்குதல்கள் தொடர்கின்றன” இவ்வாறு, நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் விசனம் தெரிவித்தார். நிந்தவூர் பிரதேசசபைப் பிரிவுக்குட்பட்ட முன்பள்ளிப் பாடசாலை சிறார்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் இரண்டாம் கட்ட நிகழ்வுக்குத் தலைமை வகித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். நிந்தவூர்…

Read More