Headlines

வாக்களித்த மக்களின் நலனும், சமூக மேம்பாடுமே எமது நோக்கம்! அபிவிருத்தியால் இன்னும் மிளிரும் எமது பிரதேசம்!! – இஸ்மாயில் எம்.பி. சூளுரை

“திகாமடுல்ல மாவட்ட மக்கள் என்னை ஆதரித்து, அங்கீகரித்து கடந்த பராளுமன்றத் தேர்தலில் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை அளித்தமையை என்றும் மறவாமல் இருக்கின்றேன்.” – இவ்வாறு திகாமடுல்ல மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் தெரிவித்தார். ‘ரண் மாவத்’ அபிவிருத்தி திட்டத்தினூடாக எமது பிரதேசத்திலுள்ள இரு பெரும் வீதிகளுக்கு காபட் இடும் வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்த பின்னர் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், சில மாதங்களுக்கு முன்னர்…

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் நிதி ஒதுக்கீட்டில் எருக்கலம்பிட்டி கிராமத்திற்கான விதிப்புனரமைப்பு பணிகள் ஆரம்பம்…

மன்னார் பிரதேசபை உறுப்பினர் மஹிஷா அவர்களின் வேண்டுகோளில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் ருக்கலம்பிட்டி கிராமத்திற்கான கொங்கிரீட் பாதை ,வேலைத்திட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டது. மன்னார் பிரதேசபை தவிசாளர் எஸ்.எச்.எம் முஜாஹிர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு ஆரம்பித்துவைத்தார் இந்த நிகழ்வில் அதிபர் அஸ்மி மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஊர்மக்களும் கலந்துகொண்டனர்…

Read More

இலங்கை முஸ்லீம்கள் ஜம்யதுல் உலமாவின் வழிகாட்டலை மீறி எதிர்காலத்தில் எவரும் செயற்படுவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் சமகால அரசியல் நிலைப்பாடு தொடர்பாக மக்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டத்தில் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை முஸ்லீம்கள் அகில இலங்கை ஜம்யதுல் உலமாவின் வழிகாட்டலை மீறி எதிர்காலத்தில் எவரும் செயற்படுவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். சமகால அரசியல் தொடர்பாக பிரதேச மக்களுக்கு விளக்கம்; அளிக்கும் கூட்டம் (14.06.2016)  மாலை வாழைச்சேனை அந் நூர் தேசிய பாடசாலை பிரதான மண்டபத்தில் எம்.எஸ்.கே.ரஹ்மான் தலைமையில் இடம் பெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றம் போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்….

Read More

மஞ்சன்தெடுவாய் பிரதேசத்தில் கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு வீதிகள் கையளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலி கலந்துகொண்டார்.

மஞ்சன்தெடுவாய் பிரதேசத்தில் கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் 20லட்சம் நிதி ஒதுக்கீட்டின் மூலம் இரு வீதிகள் புணரமைக்கப்பட்டு மக்களின் பாவணைக்கு கையளிக்கும் நிகழ்வு 16.06.2019 இணைப்பாளர் றம்ழான் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டு திறந்து வைத்தார். இந்நிகழ்வில் காத்தான்குடிநகர சபை உறுப்பினர் ஜெளபர் ஹான், முன்னாள் நகரசபைஉறுப்பினர் மாஹிர்ஹாஜி, மத்திய குழு செயலாளர் சப்ரி, கொள்ளைபரப்புச் செயலாளர் முகைதீன் சாலி , ஜமால்தீன் ஹாஜி , மற்றும்…

Read More

முள்ளிப்பொத்தானை அல்_ஹிஜ்ரா மத்திய கல்லூரிக்கான பார்வையாளர் அரங்கு

திருகோணமலை மாவட்டம் தம்பலகம பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை அல்ஹிஜ்ரா மத்திய கல்லூரிக்கான பார்வையாளர் அரங்குக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இடம் பெற்றுள்ளது. குறித்த நிகழ்வானது திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் அவர்களினால் இன்று (15) அடிக்கல் நட்டு வைக்கப்பட்டது கம்பரெலிய வேலைத் திட்டத்தின் கீழ் சுமார் 15 இலட்சம் ரூபா செலவில் இப் பார்வையாளர் அரங்கு நிர்மாணிக்கப்படவுள்ளது இவ் நிகழ்வில் தம்பலகம பிரதேச சபை உறுப்பினர்களான தாலிப் அலி, ரெஜீன் உட்பட டாக்டர்…

Read More

கோறைப்பற்றுவில், 50 வீட்டுத்திட்டம் ஆரம்பித்துவைப்பு

மட்டக்களப்பு, கோறளைப் பற்று வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கேணிநகர் 50 செமடசெவண வீட்டு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று 14.06.2019 கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ஹைதர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளருமான அமீர் அலி கலந்து கொண்டு அடிக்கல் நட்டார். இந்நிகழ்வில் பிரதேச சபை தவிசாளர் அஸ்மி, கிராம சேவை உத்யியோகத்தர் தேவேந்திரன், அபிவிருத்தி உத்தியோகத்தர், வீடமைப்பு…

Read More

‘ரண் மாவத்’ அபிவிருத்திகள் சம்மாந்துறையில் ஆரம்பிப்பு..!

‘ரண் மாவத்’ அபிவிருத்திப் பணிகளின் கீழ் அம்பாறை 3ஆம் வீதி – முதலாம் குறுக்குத் தெரு – மகளிர் பாடசாலை வீதிகளின் 1150 மீற்றர் காபட் இடும் பணிகள் வேலைத்திட்டம் இன்று (14.06.2019) பி.ப. 1.30 மணிக்கு (ஜூம்ஆ தொழுகையைத் தொடர்ந்து), பிரதேச சபை உறுப்பினர் றியாஸ் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ் வேலைத்திட்டத்தினை ஆரம்பம் செய்யும் நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் கலந்து சிறப்பித்ததுடன் அதிதிகளாக பிரதேச சபை உறுப்பினர்களான ஏ….

Read More

சமுர்த்தி உரித்து வழங்கும் வைபவத்தில் அப்துல்லா மஃறூப்  எம்.பி பங்கேற்பு

ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சினால் தேசிய மட்டத்தில் நடை முறைப்படுத்தப்பட்டு வரும் ஆறு இலட்சம் பயனாளிகளுக்கு சமுர்த்தி நிவாரண உரித்து வழங்கும் வைபவம் திருகோணமலைக்கான நிகழ்வு கந்தளாவில் இடம் பெற்றது. இவ் நிகழ்வில் அமைச்சர்களான தயாகமகே, அனோமாகமகே மற்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லா மஃறூப், இரா.சம்மந்தன், எம்.எஸ்.தௌபீக், இம்ரான் மஹ்ரூப், சந்திப் சமரசிங்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்

Read More

கலிமாச்சொன்னது தவறா? கண்ணீர் சிந்தினார் இஷாக் எம்.பி

அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் நிதியொதுக்கீட்டில் இப்பொலோகம பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கல்லஞ்சியாகம அ/கல்லஞ்சியாகம அரபா முஸ்லிம் வித்தியாலயத்தில் புதிய வகுப்பறைக்கட்டிடம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் இன்று பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களினால் நடப்பட்டது. பாடசாலை அதிபர் எஸ்.எ.நுவைஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இப்பொலோகம பிரதேச சபை உறுப்பினர் நளீம், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் மற்றும் ஊர்மக்கள் பலரும் கலந்துகொண்டனர். குறித்த நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் இஷாக்…

Read More

விசாரணைகளுக்கு முகங்கொடுக்க எப்போதும் ஆயத்தம்: மகா நாயக்க தேரர்களிடம் ரிஷாட் எம்.பி எடுத்துரைப்பு!

தன்மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் போலியானவை எனவும், எனினும் பொலிஸ் திணைக்களம் இது தொடர்பில் தற்போது முறைப்பாடுகளை பதிவு செய்து வருவதால்  எந்த விசாரணைக்கும் தான் ஒத்துழைப்பு வழங்கவும் முகங்கொடுக்கவும்  தயாராகவுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான  ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மகாநாயக்க தேரர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (11) கண்டியில் இடம்பெற்ற போதே முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இவ்வாறு தெரிவித்தார். பயங்கரவாத தாக்குதல்களுக்கு பின்னர் முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து…

Read More

மௌனம் காக்கும் மேலாண்மைவாதம்! ஐக்கியமே சமூக இருப்புக்கான மார்க்கம்.

ராணுவ யுத்திகளும்,ஆயுதப் பலமும் பயங்கரவாதத்தை மௌனிக்கச் செய்ததைப் போல், அரசியல் யுக்திகளும் இராஜதந்திர நகர்வுகளும் பேரினவாதத்தை மெளனம்காக்க வைத்துள்ளது. பௌத்தர்களின் 2500 வருட கலாசாரங்கள் இலங்கையில் தலைநிமிர்ந்து வாழ வேண்டுமானால் ஏனைய நாகரீகங்கள் மற்றும் இனங்கள் தலைகுனிந்து வாழவேண்டும் என்று, கடும்போக்கு தேரவாதம் நினைக்கிறது. இந்தக் கடும்போக்கிற்குப் பின்னாலுள்ள சக்திகளை அடையாளம் காணும் வரை எமது நாட்டில் எதையும் சாதிக்க முடியாது.இவர்களுக்குப் பின்னால் அரசியல்வாதிகள் உள்ளனர் என்பதில் எவருக்கும் சந்தேகம் இல்லைதான்.ஆனால் எத்தனை வீதமான பௌத்தர்கள் இவர்களை…

Read More

மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 10,113 சமுர்த்தி பயனாளிகளுக்கான சமுர்த்தி நிவாரண உரித்துப்படிவம் வழங்கும் நிகழ்வு

மன்னார் மாவட்டத்தின் ஐந்து பிரதேச செயலகங்களுக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 10,113 சமுர்த்தி பயனாளிகளுக்கான சமுர்த்தி நிவாரண உரித்துப்படிவம் வழங்கும் நிகழ்வு மன்னார் நகரசபை மைதானத்தில் இடம்பெற்றது.  சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினூடாக செயற்படுத்தப்படும் இவ்வேலைத்திட்டத்தின் இன்றைய நிகழ்வில் பிரதம அதிதியாக ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயா கமகே கலந்து கொண்டார்.  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், மன்னார்…

Read More