Headlines

பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட உள்வாரி பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று 01.08.2019 மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் அரசாங்க அதிபர் உதயகுமார் தலைமையில் இடம்பெற்றது . நிகழ்வில் விவசாய நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டு நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான யோகேஸ்வரன் ,ஸ்ரீநேசன் , உதவி அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரீகாந், மேலதிக அரசாங்க அதிபர் முகுந்தன்,…

Read More

மன்னார் மாவட்ட காணி கபளீகரப்பிரச்சினைக்கு கொழும்பில் உயர் மட்ட மாநாட்டுக்கு ஏற்பாடு மாவட்ட எம் பிக்களின் பங்கேற்புடன் தீர்வு காண முயற்சி

மன்னார் மாவட்டத்தில் நீண்டகாலமாக தீர்க்கப்படாதிருக்கும் காணிப்பிரச்சினை, குறிப்பாக வன பரிபாலனத் திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றின் நடவடிக்கையால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புக்கு   தீர்வு காணும் வகையில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரினதும் பங்குபற்றலுடன்  கொழும்பில் உயர் மட்ட கூட்டம் ஒன்ரை  ஏற்பாடு செய்வதாக தெரிவித்த அமைச்சர் ரிஷாத் பதியுதீன், இந்த கூட்டத்தில் அமைச்சர் ஜோன் அமரதுங்க மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொள்ள வகை செய்வதாக உறுதியளித்தார். மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இன்று…

Read More

மன்னார் ஆயருடன் அமைச்சர் ரிஷாத் சந்திப்பு

மன்னார் மாவட்ட  ஆயர் இம்மானுவேல் பர்ணார்ந்து  அவர்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் இன்று காலை (௦1) ஆயர் இல்லத்தில் சந்தித்து பேசினார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் நாட்டிலும் குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் இனங்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள வெறுப்புணர்வுகள் மற்றும் சந்தேக பார்வையை நீக்கி பரஸ்பர சமூகங்களுக்கு இடையே நல்லெண்ணத்தையும் கட்டி எழுப்புவதன் அவசியம் குறித்து இருவரும் கலந்துரையாடினர்.   எதிர் காலத்தில் மன்னார் மாவட்டத்தில் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான ஆக்கபூர்வமான…

Read More

திருகோணமலை மாவட்ட பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமனம் வழங்கும் வைபவம்

திருகோணமலை மாவட்ட பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதம் வழங்கும் வைபவம் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது. தேசிய கொள்கைகள் பொருளாதார அபிவிருத்தி ,மீள்குடியேற்றம் மற்றும் வடக்கு மாகாண அபிவிருத்தி,இளைஞர் விவகார அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இப் பட்டதாரி பயிலுனர் வழங்கும் நிகழ்வு திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார தலைமையில் இன்று (01) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்  இடம் பெற்றது. மொத்தமாக திருகோணமலை மாவட்டத்தில் 193 பட்டதாரிகளுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது இதில் 40…

Read More

திருகோணமலை துறை முக அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

ஜப்பான் நாட்டின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அபிவிருத்தி செய்யப்படவுள்ள திருகோணமலை துறை முக அபிவிருத்தி சம்மந்தமான கலந்துரையாடலொன்று இடம் பெற்றது. துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் மற்றும் துறை முக அதிகார சபையின் தலைவர் காவன் ரத்நாயக்க ஆகியோருக்கிடையே இன்று (31) கொழும்பு துறை முக அதிகார சபையின் கேட்போர் கூடத்தில் இக் கலந்துரையாடல் இடம் பெற்றுள்ளது. ஜப்பான் நாட்டின் நிதி உதவியின் மூலம் திருகோணமலை துறை முகம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதை…

Read More

தேர்தல்களை இலக்காகக் கொண்டே தன் மீது தொடர்ந்தேர்ச்சியான குற்றச்சாட்டுக்கள்   – பதவிப் பெறுப்பேற்பு நிகழ்வில் அமைச்சர் ரிஷாத் உரை

தேர்தல்களை இலக்காக கொண்டும், அரசியல் அதிகாரத்தை மீண்டும் பெற்றுக்கொள்ளும் நோக்கிலும்  இனவாதக் கூட்டம் என் மீது தொடர்ச்சியான குற்றாச்சாட்டுக்களை சுமத்தி, தாம் அரசியல் ஆதாயம் பெற முயல்வதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்த பின்னர் இன்று (30) காலை கொள்ளுப்பிட்டியில் உள்ள அமைச்சு அலுவலகத்தில் கடமைகளை பெறுப்பேற்ற பின்னர் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  அவர் அங்கு மேலும் கூறியதாவது, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் என்னை தொடர்புபடுத்தி சில இனவாதிகள் பல்வேறு…

Read More

டாக்டர்.ஜெமீலின் இராஜினாமாவை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித்தலைவராக இருந்த டாக்டர். ஜெமீல் தனது பதவியையும் கட்சியின் உறுப்புரிமையையும், கட்சி தொடர்பான அனைத்து பதவிகளையும் இராஜினாமா செய்வதாக அறிவித்திருந்ததை அடுத்து,  கட்சியின் அரசியல் அதிகார பீடம் கொழும்பில் நேற்று இரவு (28) கூடிய போது, அவரது இராஜினாமாவை ஏகமனதாக ஏற்றுக்கொண்டதாக செயலாளர் எஸ்.சுபைதீன் தெரிவித்தார். (ஊடகப்பிரிவு-அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்) Media Unit All Ceylon Makkal Congress Colmbo, Srilanka

Read More

அமைச்சு பதவிகளை மீண்டும் பொறுப்பேற்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அதிகார பீடம் அங்கீகாரம் – செயலாளர் சுபைதீன் அறிக்கை

அமைச்சு பதவிகளை துறந்த அகில இலங்கை மக்கள் காங்கிர்ஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் தமது பதவிகளை பொறுப்பேற்பதற்கு கட்சியின் அதிகார பீடம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக செயலாளர் எஸ். சுபைதீன் தெரிவித்தார். அதிகாரபீடக் கூட்டம் நேற்று (28) இரவு கட்சியின் தலைவர் ரிஷாத் பதியுதீன் தலைமையில் கொழும்பில் இடம்பெற்ற போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமூகத்தின் மீது சுமத்தப்பட்ட வீண் பழிகள் மற்றும் எமது தலைவர்…

Read More

சஜித் பிரேமதாசவே ஜனாதிபதி வேட்பாளருக்கு பொருத்தமானவர் -முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப்.

ஐக்கிய தேசிய முன்னணி என்ற கட்சி போர்வைக்குள் சகல சிறுபான்மை கட்சிகளும் ஒன்றினைந்து அண்மையில் இடம் பெற்ற கலந்துரையாடல் மூலமே தெரியவந்தது ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாசதான் ஜனாதிபதி வேட்பாளருக்கு பொருத்தமானவர் என்று திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் நேற்று (25) வியாழக் கிழமை அமைச்சர் சஜித் தலைமையில் செமட்ட செவண இரு மாதிரிக் கிராமங்களை கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும்…

Read More

திருகோணமலையில் இருமாதிரிக் கிராமங்கள் மக்களிடம் கையளிப்பு

திருகோணமலையிலுள்ளா குச்சவெளி பிரதேச செயலகம்,திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகம் ஆகிய இரு பிரதேச செயலக பிரிவுகளையும் உள்ளிட்ட  கன்னியா மாங்காயுற்று, தொல்காப்பிய நகர்  பெரிய குளம் பகுதியில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட  வீடமைப்பு கிராமம்  இன்று (25) வியாழக்கிழமை வீடமைப்பு நிர்மாணத் துறை அமைச்சர் சஜீத் பிரேமதாச அவர்களினால்   மக்களிடம் கையளிக்கப்பட்டன. இந்நிகழ்வில்  வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசா பிரதம அதிதியாக கலந்து கொண்டு  பயனாளிகளிடம்   “பாவநாசம் 225வது கிராமம்”  கையளிக்கப்பட்டது.இங்கு…

Read More

கந்தளாவில் நெசவுக் கைத்தெறி நிலையம் அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியால் திறந்து வைப்பு

திருகோணமலை கந்தளாய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இரண்டாம் கொலனி பகுதியில் கைத்தெறி நிலையம் ஒன்று திறந்து வைக்கப்பட்டன. பசுமைப் பெண்கள் அமைப்பு மற்றும் ஒஸ்லோ பெண்கள் சிறு குழு ஆகிய இரு பெண்கள் அமைப்பும் இணைந்து எம்.ஜே எனும் நெசவுக் கைத்தெறி நிலையம் இன்று (21) திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் அவர்களால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. பெண்கள் அமைப்பின் தலைவிகளான திருமதி.ஜெரா அருளானந்தம், திருமதி நைரூஸ் ஆகியோர்களது தலைமையில் இடம் பெற்ற இவ்…

Read More

350 இற்கும் அதிகமான குடும்பங்களுக்கு சுயதொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு

அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், கைத்தொழில் வர்த்தக அமைச்சின் முன்னாள் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் அவர்களின் நிதியொதுக்கீட்டின் கீழ் அனுராதபுரம் கஹட்டகஸ்திகிலிய பிரதேச செயலக பிரிவில் வசிக்கும் குறைந்த வருமானங்களை பெறும் 500 இற்கும் அதிகமான குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக சுய தொழில் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. கஹட்டகஸ்திகிலிய பிரதேச சபையின் அபேட்சகர் நளீம் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வில்…

Read More