Headlines

கல்வியல் கல்லூரி ஆசிரியர்களாக நியமனம் பெறுவோர் சொந்த மாவட்டத்தில் பணியாற்ற நடவடிக்கை!!!

கல்வியல் கல்லூரிகளில் இருந்து புதிதாக ஆசிரியர் நியமனங்களைப் பெற்று வெளியேறும் ஆசிரியர்களுக்கு தங்களது சொந்த மாவட்டத்தில் கடமையாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார். கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலகத்தில் நேற்று (19) இடம் பெற்ற சந்திப்பின் போதே இக்கோரிக்கையை பிரதியமைச்சர் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜீ.முதுபண்டாவிடம் முன்வைத்துள்ளார். இவ் பிரச்சினைக்கான தீர்வாக உடன் அமுலுக்கு வரும் வகையில் ஆசிரியர் பற்றாக்குறையினை கருத்திற் கொண்டு திருகோணமலை மாவட்ட கல்வியற் கல்லூரி ஆசிரியர்களை சொந்த…

Read More

பிரதமர் ரணில் விக்ரமசிங்க திருகோணமலை விஜயம் தொடர்பில் முன்னேற்பாடுகள் தயார் நிலையில்!!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க திருகோணமலைக்கு விஜயம் செய்யவுள்ளதை அடுத்து பிரதமர் அலுவலகத்தின் அதிகாரிகள் கொண்ட பாதுகாப்பு குழுவினர் குறித்த இடங்களை பார்வையிட்டார்கள். பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் தலைமையில் குறித்த அபிவிருத்தி செய்யப்படவுள்ள இடங்களே இவ்வாறு இன்று (19)பார்வையிடப்பட்டது I PROJECT(ஐபிரஜெக்ட்) திட்டம் ஊடாக வீதிகள் காபட் இடுவதற்கான அங்குரார்ப்பண வைபவம் இடம் பெறவுள்ளது எதிர்வரும் 24 /08/2019 அன்று சனிக்கிழமை பிரதமர் திருகோணமலைக்கு விஜயம் செய்து பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை அங்குரார்ப்பணம் செய்து வைக்கவுள்ளார். திருகோணமலை மட்டக்களப்பு…

Read More

20 இலட்சம் ரூபா செலவில் ஹமீதியா பொது விளையாட்டு மைதானத்துக்கான பார்வையாளர் அரங்குக்கான அடிக்கல்நாட்டும் நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் கலந்துகொண்டார்.

திருகோணமலை மாவட்டம் தம்பலகாம பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை ஹமீதியா விளையாட்டு மைதானத்தின் பார்வையாளர் அரங்குக்கான கட்டிட  நிர்மாணத்திற்கான  அடிக்கல் நடும் அங்குரார்ப்பண வைபவம் இடம் பெற்றது குறித்த நிகழ்வானது இன்று(17) துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்களால் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது வர்த்தக வாணிப கைத்தொழில் ,நீண்டகாலம் இடம் பெயர்ந்தோரை மீளக்குடியேற்றல்,திறன் அபிவிருத்தி,கூட்டுறவுத் துறை அமைச்சின் கீழ் இயங்கும் மீள்குடியேற்ற திட்ட செயலணியின் ஊடாக சுமார் 20 இலட்சம் ரூபா…

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குருநாகல் மாவட்ட மத்திய குழு கூட்டம்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குருநாகல் மாவட்ட மத்திய குழு கூட்டம் நேற்று மாலை (18) முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் சதொச பிரதி தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குருநாகல் மாவட்ட அமைப்பாளருமான நஸீர் தலைமையில் குளியாப்பிடிய சியம்பலாகஸ்கொடுவ ரிச்வீன் மண்டபத்தில் இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளரும் துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சருமான அப்துல்லா மஃறூப் அவர்கள் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் கட்சியின் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு…

Read More

கிண்ணியா வலயத்தில் உள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியப் பற்றாக்குறை மற்றும் சிறந்த கல்விச் சமூகமொன்றை உருவாக்குதல் தொடர்பான கலந்துரையாடல்!!!

கிண்ணியா வலய அதிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று (18) கிண்ணியா நகர சபை ரெஸ்ட் விடுதியில் இடம் பெற்ற இச் சந்திப்பில் எதிர்வரும் காலங்களில் வழங்கப்படவிருக்கும் ஆசிரியர்கள் நியமனங்களை கிண்ணியா வலயத்திலும் உள்வாங்கி ஆசிரியர் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்தல் உள்ளிட்ட பல்வேறு கல்வி தொடர்பான முன்னேற்றத் திட்டங்களை நடை முறைப்படுத்துவது தொடர்பாகவும் பேசப்பட்டது இது விடயமாக மேலதிகமாக நாளை (19) திங்கட் கிழமை காலை 09.00 மணிக்கு கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர்,மாகாண கல்வியமைச்சின் செயலாளர் உள்ளிட்ட…

Read More

கண்டி மாவட்ட ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா தொழில் வழிகாட்டல் நிலையம்

திறன்மிக்க இளைஞர் சமுதாயத்தை வலுவூட்டுவதற்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள கண்டி மாவட்ட ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா தொழில் வழிகாட்டல் நிலையம் நேற்று  (15) முற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், ஆளுநர்களான சரத் ஏக்கநாயக்க, ரஜித் கீர்த்தி தென்னகோன், இராஜாங்க அமைச்சர் புத்திக்க பத்திரன, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்…

Read More

வடக்கு,   கிழக்கு அபிவிருத்திக்கு  பாரிய நிதி ஒதுக்கிடு –   அமைச்சர் ரிஷாட்

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்காக இந்த அரசாங்கம் பாரிய நிதியை ஒதுக்கி உள்ளதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன்  தெரிவித்தார். வவுனியா பொது வைத்தியசாலையில்  இடம்பெற்ற கட்டிட திறப்பு விழா நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு (14) அமைச்சர் உரையாற்றினார். இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவும் கௌரவ  அதிதியாக ராஜித சேனாரத்தினவும் கலந்துகொண்டனர்.  அமைச்சர் றிஷாட் மேலும் கூறியதாவது, வடக்கிலே இந்த நான்கு வருட காலத்தில் பிரதமரின் கீழான  அமைச்சில் இருந்து ஒதுக்கப்பட்ட நிதியினால் பாரிய…

Read More

இப்றாஹிம் நபியின் தியாகவாழ்வே உலகளாவிய முஸ்லிம்களுக்கான மிகச்சிறநந்த படிப்பினை -ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் அமீர்அலி

இப்றாஹிம் நபி அவர்களின் தியாகம் நிறைந்த வாழ்க்கைதான் உலகளாவிய ரீதியில் வாழும் முஸ்லிம் உம்மாக்களுக்கான மிகச்சிறந்த படிப்பினைiயாகும்.இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் இத்தகைய தியாகத்தை ஒவ்வொரு முஸ்லிமும் நினைவு கூர்ந்து புனித ஹஜ்ஜூப் பெருநாளைக் கொண்டாட வேண்டும் இவ்வாறு மலர்ந்துள்ள புனித ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி விவாசாய நீர்ப்பாசன இராஜாங்க அi8மச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி விடுத்துள்ள பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து அச்செய்தியில் உலகளாவிய முஸ்லிம் உம்மாக்கள் பாரியளவிலான சவால்களுக்கு முகம் கொடுத்துள்ள…

Read More

பல்லின சமூகம் வாழும் இந்த நாட்டில் அனைவரும் ஒற்றுமையாகவும் சுதந்திரத்தோடும் நல்லிணக்கத்துடனும் வாழ வேண்டும்: பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப்: ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

முஸ்லிம்களின் ஐம் பெரும் கிரியைகளில் இறுதிக் கடமையாக ஹஜ் கடமை காணப்படுகிறது.புனிதத்துவமிக்க ஹஜ்ஜூப் பெருநாளை நமது நாட்டு முஸ்லிம்களும் உலகெங்கும் பரந்துவாழும் முஸ்லிம் உம்மத்துகளும் மகிழ்வுடன் இன்று கொண்டாடுகின்றனர்.  அவர்களுக்கு எனது உளம் கனிந்த ஹஜ்ஜூப் பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில்; மகிழ்ச்சியும் மனநிறைவும் அடைகின்றேன். என துறை முகங்கள் மறறும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் விடுத்துள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அச் செய்தியில் தெரிவிக்கப்படுவதாவது பல்லின  சமூகங்கள் வாழும் இந்த …

Read More

“தியாகப்பெருநாளின் மகத்துவத்தை உணர்ந்து செயற்படுவோம்” அமைச்சர் றிஷாட் பதியுதீன் வாழ்த்துச் செய்தி

தியாகம் பொறுமையின் பெறுமானங்களாகக் கிடைத்த புனித ஹஜ்ஜுப் பெருநாளின் மகத்துவத்தை உணர்ந்து முஸ்லிம்கள் நடந்து கொள்ள வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத்பதியுதீன் தெரிவித்துள்ளார். புனித ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் தெரிவித்துள்ளதாவது… : மிகச் சோதனைமிக்க காலத்தில் முஸ்லிம்களாகிய நாம் தியாகத் திருநாளைக் கொண்டாடுகிறோம். இறைதூதர் இப்றாஹிம் நபியின் முன்னுதாரணங்கள் யாவும் இறைவனைத் திருப்திப்படுத்துவதாகவே இருந்தது.அல்லாஹ்வின் கட்டளைக்காக தனது மகனையே அறுத்துப் பலியிடத் துணிந்த இப்றாஹிம் நபியின் இறை…

Read More

கொழும்பு புறக்கோட்டை வர்த்தக பெருவிழாவை அமைச்சர் ரிஷாட் அங்குரார்ப்பணம்

கைத்தொழில், வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சு மற்றும் கொழும்பு வர்த்தக சங்கம் ஆகியன இணைந்து கொழும்பு புறக்கோட்டையில் ஏற்பாடு செய்துள்ள வர்த்த பெருவிழாவின் அங்குரார்ப்பண நிகழ்வை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று காலை ஆரம்பித்து வைத்தார். சிறிய மற்றும் நடுத்தர வியாபாரிகளை ஊக்குவித்து அண்மைக்கால சம்பவங்களினால் வர்த்தக நடவடிக்கையில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவை நிவர்த்திக்கும் வகையில் இன்றும் நாளையும் ஏற்பாடு…

Read More

மன்னார் பிரதேசபைக்குட்பட்ட கிராமங்களின் வீதிப்புனரமைப்பு வேலைகள் ஆரம்பம்.

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் பிரதேசபை எல்லைக்குட்பட்ட புதுக்குடியிருப்பு,பேசாலை மற்றும் சிறுதோப்பு கிராமங்களின் வீதிப்புனரமைப்பு வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.. இந்த நிகழ்வில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும் அமைச்சரின் பிரத்தியோக செயலருமான றிப்கான் பதியுதீன் மன்னார் பிரதேசபை தவிசாளர் முஜாஹிர் மற்றும் மன்னார் மாவட்ட இளைஞ்சர் விகாரபொறுப்பாளர் முனவ்பர் பிரதேசபை உறுப்பினர்கள் கட்சி முக்கியஸ்தர்கள் ஊர்மக்களும் கலந்துகொண்டார்…

Read More