“அடிப்படைவாதத்தைப் பரப்பும் மார்க்கமாக இஸ்லாம் ? : சபையில் கர்ச்சித்தார் அப்துல்லாஹ் !!
அடிப்படைவாதத்தைப் பரப்பும் மார்க்கமாக இஸ்லாத்தை காண்பிப்பதற்கு சிலர் முயற்சிப்பதாக இராஜாங்க அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் இன்று பாராளுமன்றில் குற்றஞ்சாட்டினார். அத்துடன் ஏற்றுமதி, இறக்குமதியில் நாங்கள் வெளிநாடுகளின் மூலப்பொருட்களில் தங்கியிருக்கின்றோம். எரிபொருள் இறக்குமதி செய்யப்படுவது அரபு நாடுகளில் இருந்தாகும்.அதேபோல் இங்கிருந்து அதுகமான பொருட்களை ஏற்றுமதி செய்வதும் அரபு நாடுகளுக்காகும். ஆனால் ஏற்றுமதியை ஊக்குவிக்க நேரடி பங்களிப்புச் செய்யும் அரபு நாடுகள் தொடர்பாக அண்மைக்காலமாக முன்வைக்கப்படும் தவறான கருத்துக்கள் நிவர்த்தி செய்யப்படவேண்டும். மேலும் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்துக்கான முறையான அனுமதியைப் பெற்று…
