Headlines

இளைஞர் மாநாட்டுக்காண ஆலோசனை கலந்துரையாடல்

எதிர்வரும் 24ம் திகதி வியாழக்கிழமை கிண்ணியா மண்ணில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸியின் திருகோணமலை மாவட்ட இளைஞர் மாநாட்டுக்காண முன் ஆயத்தங்கள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (20) காலை 9.30 மணியளவில் கிண்ணியா பொது நூலக மண்டபத்தில் இடம் பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் திருகோணமலை மாவட்ட இளைஞர் அமைப்பாளர் டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா தலைமையில் இடம் பெற்ற இவ் நிகழ்வில் மாவட்ட இளைஞர்கள் பங்கு கொண்டதுடன் இளைஞர்களின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும் ஜனாதிபதி…

Read More

சிறுபான்மையினரின் இருப்பை அழிக்க துடிக்கும் சக்திகளின் மாய வலையில் சிக்காதீர்கள்- ஏறாவூரில் அமைச்சர் ரிஷாத் உருக்கமான கோரிக்கை

சிறுபான்மையினரின் இருப்பையும் பாதுகாப்பையும் அழிக்கத் துடிக்கும் இனவாதிகளின் கூடாரத்திற்குள் இருக்கும் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்‌ஷவுக்கு ஆதரவாக  நாம் ஒரு போதும் வாக்களிக்கக் கூடாது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஏறாவூர் அமைப்பாளர் லத்தீபின் தலைமையில் ஏறாவூரில்  நேற்று (18) இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில்  அமைச்சர் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, ஜனாதிபதி  வேட்பாளர் சஜித்தை ஆதரித்து முதல் முதலாக…

Read More

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் சமூகம் சாதுரியமான முடிவை எடுக்க வேண்டும் புத்தளத்தில் அமைச்சர் ரிஷாத்

இந்த தேர்தலில் நாம் எடுக்கின்ற முடிவே எமது நாட்டினதும்,மக்களினதும்,சுதந்திரம்,பாதுகாப்பு,அபிவிருத்தி என்பவைகளை கொண்டுவரும் என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் எமக்கு ஆபத்துக்கள் வருகின்ற போது அதற்காக ஜனநாயக ரீதியாக வேண்டிய சமூகமே முஸ்லிம் சமூகம் என்றும் கூறினார். புத்தளம் மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கிளைகளின் பிரதி நிதிகள் கலந்து கொண்ட கலந்துரையாடல் தில்லையடி அம்மார் மண்டபத்தில் சனிக்கிழமை இடம் பெற்ற போது அமைச்சர் றிசாத் பதியுதீன்…

Read More

யாரை ஆதரிப்பது? என்பது தொடர்பில் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல்

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது? என்பது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் தலைமையில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் ஜனநாயக முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென்று கட்சியின் முக்கியஸ்தர்களால் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது.

Read More

யாரை ஆதரிப்பது? என்பது தொடர்பில் வவுனியா மாவட்ட முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது? என்பது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வவுனியா மாவட்ட முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் தலைமையில் வவுனியாவில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் தேசிய ஜனநாயக முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென்று கட்சியின் முக்கியஸ்தர்களால் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது.

Read More

நமது சமூகத்தின் நலன் கருதியே அன்னத்திற்கு வாக்களிக்க தள்ளப்பட்டுள்ளோம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் காரியாலயத்தில் 2019/10/17 நடைபெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் புத்தளம் நகர சபைக்கு உட்பட்ட நிகழ்ச்சி நிரலில்….! எதிர் வரும் இம்மாதம் 23ம் திகதி ஐக்கிய தேசிய முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாஷ அவர்கள் புத்தளம் வருகை தர இருப்பதால்…! அந்த நிகழ்ச்சி நிரலை எவ்வாறு கையாள வேண்டும் என்ற தொனிப்பொருளில் இந்த ஆலோசனை கூட்டம் இடம்பெற்றது…!…

Read More

கிண்ணியா அல் அஹ்தாப் வித்தியாலயத்துக்கு போட்டோ கொப்பி இயந்திரம் வழங்கி வைப்பு

தி/கிண்ணியா அல் அஹ்தாப் வித்தியாலயத்துக்கான நிழற்படப் பிரதி (Photo copy machine) போட்டோ கொப்பி இயந்திரம் ஒன்று துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ்  (16) பிரதியமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா அவர்களால் உத்தியோகபூர்வமாக பாடசாலை அதிபர் முஸம்மில் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. இதில் கிண்ணியா நகர சபை உறுப்பினர் நிஸார்தீன் முஹம்மட்,பிரதியமைச்சரின் இணைப்பாளர் ஈ.எல்.அனீஸ் ஆகியோர்களும் பிரசன்னமாகியிருந்தனர்..

Read More

தன்னையும் கட்சியையும் தூரப்படுத்தும் வகையில் போலியான பிரசாரங்கள் – அப்துல் மஜீத் குற்றச்சாட்டு.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வளர்ச்சியில் காழ்ப்புணர்வு கொண்ட சக்திகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு போலியான பிரசாரங்களின் தொடர்ச்சியாகவே தன்னையும் கட்சியையும் தூரப்படுத்தும் வகையில் இன்னொரு பொய்யான செய்தி பரப்பப்பட்டு வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினருமான அப்துல் மஜீத் (எஸ்.எஸ்.பி)  தெரிவித்தார். அண்மைக்காலமாக இந்த நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவது தமக்கு கவலையளிப்பதாகவும் தன்னை மட்டுமல்ல மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்களை குறிவைத்து திட்டமிட்டு இந்த தீய…

Read More

அமைச்சர் றிஷாட்டின் கரங்களை பலப்படுத்தி தொடர்ந்தும் பயணிப்பேன்.. வெளியேறப்போவதாக கூறுவது கட்டுக்கதை என்கிறார் சிராஸ்

அகில இலங்கை மக்கள் காங்கிரசிலிருந்து தான் வெளியேறப்போவதாக பரப்பப்படும் செய்திகள் அப்பட்டமான பொய் எனவும் அரசியலில் இருந்து தன்னை ஓரங்கட்டுவதற்காக  சதிகாரர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த புனைகதைகளை நம்பவேண்டாம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி தவிசாளரும் முன்னாள் மேயருமான சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார். கட்சியின் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீனின்  கரங்களை  பலப்படுத்தி கட்சியின் வளர்ச்சிக்கு முழுமையான  ஒத்துழைப்புக்களை நல்குவேன் எனவும் அவர் உறுதியளித்தார். அண்மைக்காலமாக வேண்டுமென்றே தன்னைப்பற்றி பொய்யான பரப்புரைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தான் கட்சி…

Read More

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாசவை ஆதரிக்கும் கூட்டம் மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் தலைமையில் ஆனமடுவ மதவாக்குளத்தில் இடம்பெற்றது….

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் தலைமையில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாச அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டம் புத்தள மாவட்டம் ஆனமடுவ மதவாக்குளம் பிரதேசத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட அலி சப்ரி ரஹீம் அவர்கள் கூறுகையில்…! எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில் எமது சிறுபான்மை சமூகம் பாரிய சவால்களுக்கு மத்தியில் இந்த தேர்தலை எதிர்நோக்க இருக்கின்றோம்..எமது சமூகத்தின் நலன் கருதி சிறுபான்மை முஸ்லிம் கட்சிகளின் தலைமைகள் ஒன்று…

Read More

கிண்ணியா மாகாத் நகர் விளையாட்டு மைதான புனரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைத்த பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப்!!!

கிண்ணியா மாகாத் நகரில் உள்ள பொது விளையாட்டு மைதானத்தின் புனரமைப்பு பணிகளை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்கள் நேற்று (12.10.2019) ஆரம்பித்து வைத்தார். விளையாட்டு மைதான புனரமைப்புக்காக வர்த்தக வாணிப கைத்தொழில் நீண்ட காலம் இடம் பெயர்ந்தோரை மீளக்குடியேற்றுதல் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் அமைச்சின் கீழ் இயங்கும் மீள்குடியேற்ற செயலணி திட்ட அலகு எனும் திட்டத்தில்  20 இலட்சம் ரூபா செலவில்   குறித்த வேலைத் திட்டம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இவ்…

Read More

பளிச்சென்று வெளிச்சமாகிறது சம்மாந்துறை பொது மைதானம்

சம்மாந்துறை செந்நெல் கிராமம்-1ல் அமைந்துள்ள பொது மைதான அபிவிருத்திற்காக 17 மில்லின் ரூபா முதல்கட்ட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் அவர்களின் முயற்சியின் பலனாக சம்மாந்துறை பொது மைதானம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இதற்கான முதற்கட்ட ஒதுக்கீடாகவே குறித்த தொகை RIDP திட்டத்தினூடாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், பாரிய தொகை இதன் அடுத்தகட்ட ஒதுக்கீடாக கிடைக்கப்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. மைதானத்தின் பல வருடகால குறைபாடுகளைக் கவனத்திலெடுத்து பலராலும் செயற்றிறனுடன் மேற்கொள்ளப்படாமலிருந்த பெருமளவிலான அபிவிருத்தியை இம் மைதானம் காணவுள்ளமை இதன்…

Read More