அகதி வாழ்வில் 29 வருடங்கள் ; மீள்குடியேற்றம் நிறைவேற்றமடைய பிரார்த்திக்கின்றேன்: அமைச்சர் ரிஷாத் பதியுதீன்
வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்களை தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றும் செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்து, இழந்து போன நமது சமூகத்தின் உரிமைகளை பெற்றுக்கொடுப்பதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தன்னை முழுமையாக தொடர்ந்தும் அர்ப்பணிக்குமென அக்கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். வடபுல அகதிகள் வெளியேற்றப்பட்டு இன்றுடன் (31) 29 வருடங்கள் நிறைவடையும் நிலையில், இன்னும் சொந்த இடங்களில் மீள்குடியேற முடியாமல் தவித்து வரும் மக்கள் துரிதகதியில் மீள்குடியேறவும், மீள்குடியமர்ந்து இன்னும் அடிப்படை வசதிகள் நிறைவுபெறாத வகையில்…
