“முல்லைத்தீவு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துக்கு தலா 20 பேர்ச் காணியையேனும் பெற்றுக்கொடுங்கள்” மீளாய்வு கூட்டத்தில் பிரதமரிடம் அமைச்சர் றிஷாட் அழுத்தம்
நாட்டில் அமைதி திரும்பி ஒன்பது ஆண்டுகளாகியுள்ள போதும், இடம்பெயர்ந்த முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்கள், குடியிருக்க காணியின்றி அவதிப்படுவதாகவும் அவர்களுக்கு தலா 20 பேர்ச் காணியையேனும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தினார். முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம், மாவட்ட செயலகத்தில் பிரதமர் தலைமையில் இன்று (16) நடைபெற்ற போது அமைச்சர் இவ்வாறு வலியுறுத்தினார். “தமது சொந்த மாவட்டமான முல்லைத்தீவில் சுமார் 28 வருடங்களுக்கு முன்னர் குடியிருந்த இந்த…
