வெள்ளாங்குள பிரதேச மக்களின் பரிதாபம்! ஆசைகாட்டி ஏமாற்றப்பட்டிருப்பதாக குமுறல்!
சுமார் எட்டு வருடங்களுக்கு முன்னர் (இந்திய வீடுகள்) என்ற ஒரு திட்டத்தில் சேவா கிராமம் , கணேசபுரம், இந்திய வீடமைப்பு கிராமம் என்ற பெயர்களில் நாங்கள் குடியமர்த்தப்பட்ட போதும் இற்றை வரை எங்களுக்கு உறுதியோ, பெர்மிட்டோ வழங்கப்படவில்லையேன்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியூதீனிடம் பாதிக்கப்பட்ட ஊர் மக்கள் முறையிட்டனர். மன்னார் வெள்ளாங்குளம் , தேவன்பிட்டி கிராமத்திற்கு சென்றிருந்த அமைச்சரை , சந்திக்க வந்த இந்த அயற்கிராம மக்கள் வாழ்க்கையில் தாம் பட்டுவரும் அவஸ்தைகளையும் அவலங்களையும் அமைச்சரிடம் வேதனையுடன் விபரித்தனர். “இந்த மூன்று கிராமங்களில்…
