Headlines

“அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் இனம், மதம் கடந்த சேவை பாராட்டப்பட வேண்டிய ஒன்று”-ரிப்கான் பதியுதீன்!

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்  தலைவருமான ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், வவுனியா மாவட்டத்தில் உள்ள பல சிங்கள கிராமங்களுக்கான வேலைத்திட்டங்களை, வடமாகாண சபை முன்னாள் உறுப்பினரும் அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான ரிப்கான் பதியுதீனினால் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் கூறியதாவது, இந்த நிகழ்வானது அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் சேவைகளின் உண்மை நிலையை இலங்கை மக்களுக்கு வெளிச்சமிட்டு காட்டக்கூடியதாக…

Read More

அமைச்சர் ரிஷாட்டை கொலை செய்ய சதி; அவரை வாக்குகளால் பலப்படுத்துவதன் மூலமே அந்த சதிகார்களுக்கு தக்க பதிலடி கொடுக்க முடியும் – மாகாண சபை முன்னாள் உறுப்பினர் நஸீர்!

அமைச்சர் ரிஷாட் பதியுதீனை கொலை செய்ய சதி சர்வதேச நாடுகளில் இருந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நாம் அவரை உங்கள் வாக்குகளால் பலப்படுத்துவதன் மூலமே அந்த சதிகார்களுக்கு தக்க பதிலடி கொடுக்க முடியும் என மாகாணசபை முன்னாள் உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட அமைப்பாளருமான எம்.என்.நஸீர் தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பங்கு மிகப்பெரியது. அவருக்கு உயிர் அச்சுறுத்தல்களும்…

Read More

பல வருடங்களாக போக்குவரத்துக்கு தடையாகயிருந்த பாதை பி.உ.சஹீலின் முயற்சியால் புதுப்பொலிவு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதி ஓதுக்கீட்டில், சம்மாந்துறை பிரதேச சபையின் வீரமுனை வட்டார உறுப்பினர் ஏ.சி.எம்.சஹீலின் முயற்சியினால், பல வருடங்களுக்கு மேலாக கவனிப்பாரற்றுக் கிடந்த சம்மாந்துறை பிரதேச சபைக்குட்பட்ட, உடங்கா 01, அம்பாறை 12 ஆம் வீதியின், குறுக்கு வீதியின் புனரமைப்பு மற்றும் பாலத்திற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பல வருட  காலமாக எந்தவித போக்குவரத்தும் இடம்பெறாது, இருள் சூழ்ந்திருந்த இப்பாதையானது, பிரதேச சபை உறுப்பினர் சஹீலின் முயற்சியினால் திருத்தம் செய்யப்படுவதனையிட்டு…

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிராந்திய கிளை ஆரம்பிக்கும் நிகழ்வு!

புத்தளம் மாவட்டத்தின் கொட்ராமுல்லை, தில்லையடி, புத்தள நகர், பாலாவி, காரைத்தீவு, புளிச்சாக்குலம், மாதம்பை ஆகிய பகுதிகளில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் புணரமைப்பு மற்றும் கட்சியின் பிராந்திய கிளை ஆரம்பிக்கும் நிகழ்வு, கட்சியின் புத்தள மாவட்ட அமைப்பாளரும், புத்தளம் நகரசபை உறுப்பினருமான அலி சப்ரியின் தலைமையில் இடம் பெற்றது. புத்தள மாவட்டத்துக்கான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மத்திய குழுவினை அமைக்கும் வகையில், புத்தளம் தொகுதியின் அனைத்து வட்டாரங்களுக்குமான நிர்வாகக்குழு அமைக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பில்…

Read More

திட்ட அமுலாக்கம் தொடர்பிலான கலந்துரையாடல்! 

கிண்ணியா பிரதேச சபையின் முனைச்சேனை வட்டாரத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூபின் 100 நாள் 200 வேலைத்திட்டத்தில், 30 மில்லியன் ரூபா நிதியில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்களை அமுல்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று (24) இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கிண்ணியா பிரதேச சபை உறுப்பினரும், முனைச்சேனை வட்டார அமைப்பாளருமான அஸ்மி தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும், திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்…

Read More

“அரசியலுக்கு அப்பால் மனித நேயத்துடனேயே முசலியில் வீடுகள் வழங்கப்படுகின்றன” முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் அலிக்கான் ஷரீப் தெரிவிப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனினால் முசலியில் வழங்கப்படுகின்ற வீட்டுத் திட்டமானது, அரசியலுக்கு அப்பால் மனித நேயத்துடனே வழங்கப்படுகின்றன என்று முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் அலிகான் சரீப் தெரிவித்தார். முசலியில் அமைக்கப்படவுள்ள 7௦௦ வீட்டுத் திட்டத்துக்கான அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். மன்னார், முசலி தேசிய பாடசாலையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது, ‘’முசலியிலே நடைபெறுகின்ற இந்த வைபவத்தினை ஒரு…

Read More

காணி தொடர்பான ஆவணங்கள் திரட்டல்!

கிழக்கு மாகாணத்தில் தீர்த்து வைக்கப்படாத காணிப் பிரச்சினைகள் தொடர்பான ஆவணங்கள் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து திரட்டப்பட்டு வருவதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாளர் எஸ். சுபைர்டீன் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில், நீண்டகாலமாக தீர்த்து வைக்கப்படாத காணிப் பிரச்சினை தொடர்பாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் காணியமைச்சர் ஆகியோருடன் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கமைய, விவரங்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய…

Read More

கிழக்கு மாகாண ஆளுனருடன், பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில் கலந்துரையாடல்!

கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகமவைச் சந்தித்த சம்மாந்துறை பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில், அம்பாறை மாவட்ட கல்வி, சுகாதாரம் மற்றும் விளையாட்டு பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடினார். மேலும், அம்பாறை மாவட்டத்தில் மும்மொழி பாடசாலையின் அவசியத்தை பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில் விளக்கினார். அதன் முதற்கட்டமாக சம்மாந்துறையில் மும்மொழி பாடசாலையை அமைப்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்கான சம்மதத்தை கிழக்கு மாகாண ஆளுனர் தெரிவித்து இருக்கின்றார். அதே போன்று அம்பாறை மாவட்டத்தில் சுகாதாரம்,விளையாட்டு மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் கண்டறிவதற்கான விஜயம் ஒன்றினை…

Read More

சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான நிலையான சூழலை உருவாக்குவதற்கான இரண்டாவது வரைவு அறிக்கை அமைச்சரிடம் கையளிப்பு!

“சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு மிகவும் உகந்த சூழலை உருவாக்கி, அவற்றை பெரிய அளவிலான நிலையான வணிக நிறுவனங்களாக மாற்றி,   ஏற்றுமதி சந்தைகளுடன் இணைப்பதற்குகாக 3.2 மில்லியன் ரூபா செலவில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தொழில் முயற்சி ஆய்வினை நடாத்தியுள்ளது. இந்த முயற்சிக்காக நிதி ஆதரவுகளை விரிவுபடுத்தியதற்காக, ஜேர்மன் அபிவிருத்தி நிறுவனத்திற்கு நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன்” என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அமைச்சர் ரிஷாட் பதியுதீன், சிறிய மற்றும் நடுத்தர…

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீனை கொலை செய்ய சதி; பொலிஸ்மா அதிபரிடம் மக்கள் காங்கிரஸ் நேரில் முறைப்பாடு!!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனை கொலை செய்வதற்கான சதித்திட்டம், ஊழல் ஒழிப்பு முன்னணியின் பணிப்பாளர் எனக் கூறும் நாமல் குமாரவினால் அம்பலத்துக்கு வந்த பின்னணியில், பொலிஸ் திணைக்களம் அது தொடர்பில், தீவிர விசாரணைகளை நடாத்தி உண்மைகளைக் கண்டறிந்து, உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபரிடம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன்று (22) முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் பிரதிஅமைச்சருமான அமீர் அலி,…

Read More

கொதடுவை அஹதியா பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா!

வெல்லம்பிட்டிய, கொதடுவை தாருல் நாபீஹா அஹதியா பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று மாலை (21) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளரும், மேல்மாகாண சபை உறுப்பினருமான ஏ.ஜெ.எம்.பாயிஸ் கலந்துகொண்டு உரையாற்றியதுடன், மாணவர்களுக்கு பரிசில்களையும் வழங்கி வைத்தார்.  (ன)

Read More

மினாநகர் பள்ளிவாசல் சுற்றுமதிலுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், வவுனியா, மினாநகர் பள்ளிவாசலின் சுற்றுமதிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (21) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் முத்து முஹம்மட், மக்கள் தொடர்பு அதிகாரி மெளலவி தாஹிர், வவுனியா நகர சபை உறுப்பினரும், இணைப்பாளருமான அப்துல் பாரி, மீள்குடியேற்ற செயலணியின் மாவட்ட இணைப்பாளர் சியாம், பிரதேச சபை வேட்பாளர் மன்சூர் உட்பட பலர் பங்கேற்றிருந்தனர்….

Read More