Headlines

நிந்தவூர் தெற்கு செங்கல் உற்பத்தி மற்றும் விற்பனை கூட்டுறவு சங்கத்தின் மாதாந்த கூட்டம்!

செங்கல் உற்பத்தியாளர்களான நீங்கள் நாட்டின் உட்கட்டுமான அபிவிருத்திப் பணிகளில் பாரிய பங்களிப்பை வழங்கி வருகின்றீர்கள், அதேபோல நமது பிள்ளைகளின் ஆரோக்கியத்தை கருத்திற்கொண்டு, உமி மற்றும் சாம்பல் போன்ற கழிவுகளினால் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் தங்களது உற்பத்தித் தளங்களை மாற்றியமைத்து உற்பத்தியில் ஈடுபட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் தெரிவித்தார். நிந்தவூர் தெற்கு செங்கல் உற்பத்தி மற்றும் விற்பனை கூட்டுறவு சங்கத்தின் மாதாந்த கூட்டம் அதன் தலைவர்…

Read More

சிறுவர் தினத்தை முன்னிட்டு முசலி பிரதேச மாணவர்களுக்கு புத்தகப்பைகள் வழங்கிவைப்பு!

உலக சிறுவர் தினத்தை சிறப்பிக்கும் வகையில், முசலி பிரதேச செயலகத்துக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான புத்தகப்பை வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (01)  இடம்பெற்றது. கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினரும் அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளருமான றிப்கான் பதியுதீனினால் வழங்கி வைக்கப்பட்டது. சிறுவர் தினத்தை கொண்டாடும் வகையில், மாணவர்களுக்கு கற்றலுக்கான ஆர்வத்தை தூண்டும் நோக்குடன் நடைபெற்ற இந்த நிகழ்வில், சுமார் 500 க்கும்…

Read More

சியம்பலாங்கமுவ கிராம மக்களின் குடிநீர் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல்!

சுமார் 150 இற்கும் அதிகமான சிங்கள குடும்பங்கள் வசிக்கின்ற, பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய கிராமமே கல்நேவ  பிரதேச சபைக்குட்பட்ட சியம்பலாங்கமுவ  கிராமம். இக் கிராம மக்கள் பல வருடங்களாக குடிநீர் பிரச்சினையை எதிர்நோக்கி வந்துள்ளனர். இவர்களது பிரச்சினையை அறிந்த  அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதித்தலைவருமான   இஷாக் ரஹுமான் இப்பிரதேச மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொள்ளும் முகமாக, கலந்துரையாடல் ஒன்று நேற்று (01) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கல்நேவ பிரதேச சபை உறுப்பினர் ஹிஜாஸ்…

Read More

ஆசியா பசுபிக் பிராந்தியத்தின் சர்வதேச தொழில் முனைவோருக்கான அமர்வு முதல் தடவையாக இலங்கையில்!

ஆசியா பசுபிக் பிராந்தியத்தின் முன்னணி சர்வதேச தொழில் முனைவோருக்கான கல்வித் தொடர் அமர்வு, முதல் தடவையாக தென்னாசியாவில் இடம்பெற வேண்டும் என யுனெஸ்கோ – எபீட் (UNESCO-APEID) ஆகிய அமைப்புகளின் தலைமையில் இடம்பெற்ற சந்திப்பின் முடிவையடுத்து, மைல்கல் நிகழ்வாக இந்த அமர்வு இலங்கையில் இடம்பெறுகின்றது. இந்நிகழ்வு இலங்கையின் மிக உயர்ந்த சிறிய நடுத்தர தொழில்முனைவோரான வணிக அபிவிருத்தி முகவராக இயங்கும், தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையினரை (NEDA) இலக்கு வைத்திருப்பது வரப்பிரசாதம் என கைத்தொழில் மற்றும்…

Read More

தாராபுரம் ஜின்னா விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்த கரப்பந்தாட்டப் போட்டியில் பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார்….

மன்னார் தாராபுரம் ஜின்னா விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் அவர்களின் நிதியுதவியில் பகல்/இரவு ஆட்டமாக நடைபெற்ற கரப்பந்தாட்டப் போட்டி…. இந்த போட்டியின் போது 13 அணிகள் பங்கேற்றத்துடன் முதல் மூன்று இடங்களைப்பெற்ற அணிகளுக்கு பெறுமதியான பணப்பரிசில்களும், கிண்ணங்களும் வழங்கி கொளரவிக்கப்பட்டது. இந்த விளையாட்டு நிகழ்வை அமைச்சர் றிஷாட் பதியுதீன் ஆரம்பித்து வைத்ததுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்…..

Read More

இன உறவை வலுப்படுத்த அம்பாறையில் இடம்பெற்ற பிராந்திய மாநாடு: அமைச்சர்கள், சர்வமதப் பெரியார்கள் பங்கேற்பு!

இலங்கையில் நிலைபேறான தன்மைக்காக தேசிய மற்றும் மத நல்லிணக்க பிராந்திய மாநாடு, சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில், பௌத்த இஸ்லாமிய இந்து மத பெரியார்களின் பங்குபற்றுதலுடன், அம்பாறை மொண்டி ஹோட்டலில் இன்று காலை (01) நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் விஷேடமாகப் பங்கேற்று, இன நல்லிணக்கம் தொடர்பான தமது கருத்துக்களையும், முன்மொழிவுகளையும், ஆலோசனைகளையும் வெளிப்படுத்தினர். குறிப்பாக, இந்த மாநாட்டில் தமிழ், முஸ்லிம் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றமை விஷேட அம்சமாகும். அமைச்சர்காளன ரிஷாட் பதியுதீன், டி.எம்.சுவாமிநாதன்,…

Read More

அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின் “100 நாள் 200 வேலைத் திட்டம்”

40 ஆவது வேலைத்திட்டம்  சேருவில, செல்வநகர், புளியங்குளம் புனரமைப்பு வேலைத்திட்டம் ௦2 மில்லியன் ரூபா நிதியில் ஆரம்பம்! அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், பாராளுமன்ற உறுப்பினரும், திருமலை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின்,  திருகோணமலை மாவட்ட அபிவிருத்தித் திட்டத்தில், சேருவில பிரதேச சபை உறுப்பினர் ஏ.சி.அன்வரின் வேண்டுகோளுக்கிணங்க, சேருவில, செல்வநகர், புளியங்குளம் புனரமைப்பு பணிகள், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூபினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது….

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் கெகுணகொல்ல தேசிய பாடசாலையின் உள்ளக பாதை அபிவிருத்தி!

நாடளாவிய ரீதியில் அதிகம் பேசப்படும் பாடசாலைகளுள் ஒன்றான குருநாகல், கெகுணகொல்ல தேசிய பாடசாலையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு,  பாடசாலையின் உற்பகுதியை அழகுபடுத்தும் நோக்கில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் உள்ளக பாதைகள் அமைக்கும் வேலைகள் நிறைவுபெற்ற நிலையில் உள்ளன. பாடசாலையின் உள்ளக பாதை பணிகளை முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், மக்கள் காங்கிரஸ் குருநாகல் மாவட்ட அமைப்பாளருமான என்.எம். நஸீர், நேரடியாகச் சென்று பார்வையிட்டார். இதன்போது, குளியாப்பிடிய பிரதேச சபை…

Read More

“அரசியல் அந்தஸ்தைப் பெற்று வாளாவிருந்தவர்களை அபிவிருத்தியின்பால் திரும்ப வைத்துள்ளோம்” – நிந்தவூரில் அமைச்சர் ரிஷாட்!

அம்பாறை மாவட்ட மக்களின் வாக்குகளைப் பெற்று நீண்டகாலமாக அரசியல் செய்து, அரசியல் அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டவர்கள், அந்த மக்களை திரும்பிக்கூட பார்க்காமலும், அவர்களுக்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பற்றி சிந்திக்காமலும் இருந்து வருகின்றனர் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட பிராந்தியக் காரியாலயத்தை இன்று (30) நிந்தவூரில் திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், நீண்டகாலமாக இப்பிராந்தியத்தில் மிக இலகுவாக…

Read More

மக்கள் காங்கிரஸின் கிளைக் காரியாலயத் திறப்பு விழா நிந்தவூரில்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட கிளைக் காரியாலயம் நிந்தவூரில், கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனினால் இன்று (30) திறந்து வைக்கப்பட்டது. நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் தாஹிர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், கட்சியின் தவிசாளரும் பிரதியமைச்சருமான அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், கட்சியின் செயலாளர்  எஸ்.சுபைர்தீன், முன்னாள் தவிசாளரும், நுகர்வோர் அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான சட்டத்தரணி எம்.ஏ.அன்சில், அமைச்சரின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஜுனைதீன் மான்குட்டி மற்றும் கிழக்கு மாகாண  இளைஞர்…

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீனினால் பாலமுனை அல்ஹிதாயா மகளிர் கல்லூரிக்கான நுழைவாயில் மற்றும் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலுக்கான நுழைவாயில் அமைப்பதற்கு நிதியுதவி!

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், நுகர்வோர் அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான சட்டத்தரணி எம்.ஏ.அன்சிலின் முயற்சியில், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின்   நிதியொதுக்கீட்டில், பாலமுனை அல்/ஹிதாயா மகளிர் கல்லூரிக்கும் அதேபோன்று, பாலமுனை ஜும்ஆ பெரிய பள்ளிவாசலுக்கும் புதிய நுழைவாயில் ( GATEWAY) அமைக்கப்படவுள்ளது. அண்மையில் அமைச்சரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கமைய உடனடியாக நிதியொதுக்கிய நிலையில், தயாரிக்கப்பட்ட நுழைவாயில் அமைப்பு மாதிரிகள் (Model), இன்று காலை (30) கலந்தாலோசித்து, உறுதி செய்து, வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க அனுப்பி வைக்கப்பப்பட்டது. இதன்போது ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தலைவர் எம்.ஏ.அப்துல் அன்சார் ஆசிரியர் உள்ளிட்ட பள்ளிவாசல் பரிபாலன சபை உறுப்பினர்கள், பாலமுனை சிவில் அமைப்புக்களின்…

Read More

அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின் “100 நாள் 200 வேலைத் திட்டம்”- பதவிசிறிபுரவில் 05 வேலைத்திட்டங்கள் ஆரம்பம்!

35 வது, 36 வது, 37 வது, 38 வது, 39 வது வேலைத்திட்டங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், பாராளுமன்ற உறுப்பினரும், திருமலை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின்,  திருகோணமலை மாவட்ட அபிவிருத்தித் திட்டத்தில் பதவிசிறிபுர பிரதேசத்தில் 05  அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டன. 35 வது வேலைத்திட்டம் – அபேசிங்ஹ வீதி, 1.5 மில்லியன் ரூபாவில் கொங்ரீட் வீதியாகவும் 36…

Read More